உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

175

அருட்பேறு ஒருதலையாமென்க. யான் வருந்தினும் வருந்துக, என்பொருட்டுப் பிறிதோர் உயிர் வருந்தல் வேண்டேன் என்பது துறவிக்குச் சிறந்த ஒழுகலாறு; இதனைத்,

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை'

(குறள் 327)

என்று ஆசிரியர் கூறுதலாற் கடைப்பிடிக்க. ஆசிரியர் மற் றெந்தச் சாதியார்க்குஞ் சமயத்தார்க்குந் தேறற்கரிதாய் கிடந்த இவ்வருட்பான்மைக் கொல்லாவறத்தினை நிறுத்துவான் கருதி, ஆரியர் வேள்விவேட்டற்கண் உயிர்க்கொலை செய்தலாம் என்று கூறுதலை மறுத்து,

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், உயிர்செகுத் துண்ணாமை நன்று'

(குறள் 259)

காண்க.

என்று முடிபுரைக் முடிபுரைக் கட்டளையிட்டருளினமை அறநெறி விளக்குதலே தமக்குக் கருத்தாகவுடைய கௌதம சாக்கியர் அறிவுறுத்திய எண்வகை யறங்களும் பிறவும், தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் கூறியருளிய இவ்வருளறத்தின் சிறப்புடையவாகாமையும், அவையும் இஃதொன்றன்கண்ணே அடங்குதலும் கண்டு கொள்க.

அற்றேல் அஃதாக, ஆரியர் வேள்வி வேட்டற்பொருட்டு உயிர்க்கொலை வேண்டுமென்ற தன்றி, உயிர்க்கொலைப் பொருட்டு வேட்கற்பாற்றென்று கூறியதில்லை

""

யாலோ

வெனின்;- அது பொருந்தாது; பிள்ளைக்குச் சோறு தீற்றுதலாகிய ‘அன்னப் பிரசானஞ்' செய்யும் வினை கூறும் போது, “உடல் நலங் கருதினால் வெள்ளாட்டுக் கறியும், அறிவும் பெற வேண்டினால் கவுதாரிக் கறியும் ஊட்டுக என்று ஆசுவலாயனரும் சாங்காயனரும் கூறுதலானும், “மிகவுந் திறமையாகப் பேசல் வேண்டின் பாரத்துவாசி என்னும் பறவைக்கறியும், விரைவாகப் பேச விரும்பினால் மீன்கறியும் ஊட்டுக” எனப் பாரஸ்கரருங் கூறுதலானும் ஆரியர் ஆவும் எருமையுங்காளையும் என்னும் விலங்குகளின் இறைச்சியை அட்டு உண்டமையும், ஆவை அறுக்குங் கொட்டிலும், சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/200&oldid=1579825" இலிருந்து மீள்விக்கப்பட்டது