உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் 10

வந்தவர்க்குக் காளை ஆ இவற்றையறுத்துக் கறி சமைத்தலும் இருக்குவேதத்திலும் ஐதரேயபிராமணத்தினும் நன்கு விரித்துக் கூறப்படுதலானும், இறைச்சி யுண்ண வேண்டினோன் வேட்டு உண்ணுக என்னுங் கட்டளை பின் வந்த மிருதி நூல்களிலுங் காணப்படுதலானும், வடநாட்டு மாகாணங்களில் இன்றும் ஆரியப் பிராமணருள் ஒருசாரர் மீன்கறி முதலியன வுண்டு வாழ்த லானும், ஆரியர்க்குள் உயிர்க்கொலை வழக்கமாயிருந்த தென்று உணர்க.

இனி, இந்தியாவில் ஒரு பகுதியிலொழிய ஏனைப் பெரு நிலப் பிரிவுகளில் இருக்கும் மக்களெல்லாரும் உயிர்களைக் கொன்று தின்னக் காண்டுமாகலின் ஈண்டாசிரியர் வலியுறுத்த, கொல்லாவறம் எல்லார்க்கும் ஒப்பமுடிந்திலதாமெனின்;- நன்று சொன்னாய்; அருளறத்தின் உயர்ச்சி கூறாத சாதியருஞ் சமயத் தாரும் உலகில் இல்லை. உயிர்கண்மாட்டு அருள் பூண் டொழுகுதல் மக்கட்குரிய கடமை யாமென்பதனை அறிந்த அவர், பின்னர் அவற்றைக்கொன்று உண்பது பொருந்தாத செய்கையாம்; உயிர்க்கொலை நிகழாவிடத்தன்றி அருளொழுக்கம் இல்லாமையின்,அருளொழுக்கமுடையேமெனக் கூறிக்கொண்டு உயிர்க்கொலை புரிவார் திறம் பெரிதும் வெறுக்கற் பாலதேயாம். அமெரிக்கா முதலான மற்றை நாடுகளிலுள்ள அறிவுடையோர் இஞ்ஞான்று கொலைமறுத்தலை வலியுறுத்தி அருளறத்தின் கண்ணராய் நிலைபெற்று வருதலும் ஈண்டறியற் பாற்று. எனவே, அருளறத்தின் உண்மை நன்குணர்வார் எவராயினும் அவர்க்கெல்லாம் அஃது ஒப்பமுடிவதொரு விழுப்பொருளாகலின் அவ்வாறு கடாவுதல் யாண்டைய தென்று ஒழிக. இக்கூறியவாற்றால் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் மக்களுள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு அவரவர் ஒழுக்க வுண்மையின்மை பற்றி யன்றிப் பிறப்பினாலேயே சொல்லப்படுதலாகா தென்பதும், கல்வி யானது எல்லார்க்கும் ஒத்த உரிமைத்தாகலின் அதுதன்னை ஒரு சிலர்க்கு வரைந்துரைத்தல் நடுநிலை திறம்பலா மாகலின் அஃதெல்லாரானும் பெறற்பாற்றென்பதும், உலகிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/201&oldid=1579826" இலிருந்து மீள்விக்கப்பட்டது