உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

4. நூல் நுதலிய பொருள்

66

இனி, இந்நூலால் நுவலப்படும் பொருளெல்லாம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பாலில் அடக்கி வகுத்துக் கூறினார். ஆசிரியர் செந்தமிழ் மொழியில் நூலியற்றுகின் றாராகலின், அவர் தாமேற்கொண்ட செந்தமிழ் வழக்கிற்கு ஏற்ப எல்லாவுறுதிப் பொருளையும் அறம் பொருளின்பம் வீடென அவ்வாறு பாகுபடுத்தோதினார். இப்பாகுபாடு தமிழ் வழக்கிற்கே உரித்தாமென்பது, இன்பமும் பொருளு மறனுமென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருகின்” என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும், “அறனும் பொருளு மின்பமு மூன்று” மென உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், "சிறப்புடை மரபிற் பொருளுமின்பமும், அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல' எனக் கோவூர்கிழாருங் கூறுமாற்றால் தெளியப்படும். இப்பெற்றியறியாத பரிமேலழகியார் காமத்துப்பால் முகவுரையில், “இவர் பொருட்பாகுபாட்டினை அறம்பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான் என்று கூறுவது பொருந்தாதென மறுக்க. வடமொழியில் மனுமுதலான மிருதி நூல்களெல்லாம் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை நிலைபற்றி யோதியதல்லது, அறம்பொருளின்ப வழக்குப் பற்றி யோதாமையும் யாங்கூறியதே பொருளென்பதை வலியுறுத்தும்.

இனி, ஆசிரியர் இந்நூலை அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டமாய்க் கூறியதன்றி வீடுகூறிற்றிலராலெனின்;- அறத்தை இல்லறந் துறவறமெனப் பகுத்தெடுத்துப் பின்னையதான துறவறத்தில் வீடுபேறு எய்தற்காம் நன்னெறி கடைப்பிடித்து இனிது விளக்கினா ராகலின் வீடு கூறினாரென்றே துணிக. துறவறத்தின் வேறாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/203&oldid=1579828" இலிருந்து மீள்விக்கப்பட்டது