உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

-

நக்கீரனார்,“தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால், ஆனாவறமுதலாவந் நான்கு - மேனோருக், கூழினுரைத்தார்க்கு” எனவும், மாமூலனார், “அறம்பொருளின்பம் வீடென்னு மந்நான்கின், றிறந்தெரிந்து றிறந்தெரிந்து செப்பியதேவை" எனவும், நரிவெரூத்தலையனார், “இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு முன்பறியச் சொன்ன முதுமொழி நூல்" எனவும், கொடிஞாழன் மாணிபூதனார், "அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின், றிறன றிந்தேம் வீடு தெளிந்தேம் மறனெறிந்த, வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற், கேளாதன வெல்லாங் கேட்டு” எனவுங் கிளந்துரைத்துப் பாயிரஞ் செய்திட்டார். இந்நுட்பமறியாதார், வீடுபேற்றின்பம் இத்தன்மைத்தென ஒருவாற்றானும் உரைக்கப்படாமையின் அஃது ஒழித்து ஏனை மூன்றுமே நூல்களுட் சொல்லப் படுமென்று தத்தமக்குத் தோன்றியவாறே கூறுப. அன்பின் ஐந்திணை யொழுக்கம்பற்றி வரும் இன்பமும் நுகர்வார் தமக்கே புலனாவதல்லது பிறர்க்கு இவ்வியல்பிற்றென விளங்கக் காட்டுதலாகாமையின், அதுவும் நூல்களாற் கூறப்படா தெனல் வேண்டும். அது பொருந்தாமையின், பேரின்ப வுருவின தாம் வீடுபேற்றின்பம் உரைக்கவுங் கருதவும் ஆகாமை பற்றி அஃது எய்தற்காம் தரங்கூறுதல் நூல்களிடத்தில்லை யாயிற்றென்றல் போலியுரை யென்றொழிக. ஈண்டு ஆசிரியர் 'மெய்யுணர்தல்’ என்னுமதிகாரத்தில், ஒருவன் மெய்யுணர்வு தலைப்படுமாறும், தன்னால்

அது

வீட்டுநெறி தலைக்கூடுமாறும் நன்கு வகுத்துக்கூறுதலின் மேற் கடாவுதல் என்கொலோவென்பது.

இனி, மக்கள் என்போர் பண்டுதொட்டு ஒருங்கிருந்து கூடிவாழு மியல்பினராய்ப் போதருகின்றார். இவர் எக் காலத்தும் ஒருவர் ஒருவரை யறியாமல் தன்னந் தனியராய் வாழ்ந்திலர். ஆகவே, ஒருவர்க்கு ஒன்று வகுக்குங்கால் அவர்தாமே கைக்கொளற் பாலனவும், அவர் பிறர்மாட்டு நெருங்கி ஒழுகும் பொழுது மேற்கொள்ளற்பாலனவும் முறைப்படுத்துக் கூறுதல் வேண்டும். ஈண்டு அம்முறை வழாது ஆசிரியர் தாம் விளக்க வெடுத்துக்கொண்ட உறுதிப் பொருள்களுள் அறம் என்பது ஒருவன் தன் உள்ளத்தின் கண் மாசு இலனாதலும், பிறர்மாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/204&oldid=1579829" இலிருந்து மீள்விக்கப்பட்டது