உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்னு நான்கு குற்றமுமின்றிப் பயன்பட ஒழுகுதலுமாம்.

“மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்

ஆகுல நீர பிற”

(குறள் 34)

து

என்ற திருமொழி ஒருவன்றான் கைக்கொளற்பாலது வென்பதனை நுதலி யெழுந்தது. அதற்கடுத்த,

“அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொல் நான்கும்

இழுக்கா வியன்ற தறம்

(குறள் 35)

டு

என்பது அவன் பிறர்பாற் பொருந்தி நடத்தற்கண் மேற் கொளற் பாலனவற்றை வகுத்தற் பொருட்டு எழுந்தது. இங்ஙனம் ஒருவன் இருதிறமும் பிறழாது ஒழுகல் வல்லுமாயின் அவற்கு அதனான் விளைவது பேரின்பம் என்று உணர்த்துவார்,

66

'அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில

(குறள் 39)

என்றோதி யருளினார். இதனால், நல்லொழுக்கம் என்பது ஒருவற்கு முன்னே துன்பம் பயந்து பின்னர்ப் பேரின்பம் பயப்பதெனவும், தீயொழுக்க மென்பது முன்னே ஒருவற்கு ஒரு நொடியே நிலைவதான இன்பம் பயந்து பின்னர் பெருந் துன்பம் பயப்ப தெனவுங் கூறுதல் ஆசிரியர்க்குக் கருத் தாயிற்று. இவ்வாறே இக்காலத்து ஒழுக்கநூல் வல்லாரு முறைப்பது காண்க. கட்களவு இன்னாச்சொல் முதலியன வெல்லாம் ஒருவற்கு முதலிற் சிறுவரைத்தான இன்பம் நல்கிப் பின்னெல்லாம் அவற்குப் பேரிடும்பை விளைத்து வருதலும் இதுபற்றி யுணர்ந்து கொள்க.

இனி, ஆசிரியர் இப்பெற்றிப்பட்ட அறத்தினியல்பை ருவகைப்படுத்து இல்லறந் துறவறமென வைத்து உணர்த்து கின்றாராகலின், அவை யிரண்டற்கும் பொதுப்பட அறத்தின் மாட்சி வலியுறுத்தற்கு அவற்றின்முன் அறன்வலியுறுத்தல் என்னும் ஓர் அதிகாரங் கூறுவாராயிற்று. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை என்னும் மூன்றதிகாரங்களும் நூன்முழுமைக்கும் மங்கலந்தரும் பாயிரவுரையாய் முன் நின்றன. அறன்வலி யுறுத்தல்' என்னும் அதிகாரம் வருபொருளுரைத்தல் என்னும் பாயிரவுரையாய் முன் நின்றது. இஃதுணராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/205&oldid=1579830" இலிருந்து மீள்விக்கப்பட்டது