உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

181

பரிமேலழகியார் ‘அறன் வலியுறுத்தல்' அதிகாரத்திற்குச் சிறிதும் ணக்கமின்றாக ‘அறத்தான் வருவதே யின்பம்' என்பதற்கு, 'இல்லறத்தொடு பொருந்தி வருவதே யின்பமாவது' என்று உரையுரைத்தார். இது பொருந்தாமை அதிகார வாராய்ச்சி யுள்ளும் விரித்துக் காட்டுவாம்.

என்ப

இனி, ஆசிரியர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டமாக இந் நூலியற்றுதற்குத் தொடங்கி அம்முறையே அவற்றை நிறுத்தக் கூறிய தென்னையெனின்;- மக்கட் சிற்றுயிர்க்கு நற்றுணையாவது அறத்தின் வேறின்மையின் அவ்வறத்தினையே விதந்துரைத் தற்குத் தந்திருவுளம் அமர்ந்த குறிப்புத் தோன்றவும், இது முழுவதூஉம் அறநூலே என்பது யார்க்கும் பொள்ளெனப் புலப்படவும் அறத்துப் பாலை முதற்கண் நிறுத்துவாராயினர். இனி, அவ்விருவகையறனும் நிலைபெறுதற் ஓர் இன்றியமையாக் கருவிப் பொருளாய் வருதல் பற்றிப் பொருட்பாலை அதன்பின் நிறுத்தினார். இனி, “அறத்தான் வருவதே யின்பம் வாகலின் அறத்தின்பின் நிறுத்தற் பயத்தாம் இன்பம் பொருள் இல்வழித் தோன்றுதல் அருமைபற்றி அக்கருவியின் வழிவைத் தோதினாரென்க. இவ்வாறு காரணகாரிய வியைபுடைய அறம் ய இன்பமென்னும் மிரண்டனையும் பயத்தற் கருவியாய் அவற்றின் வேறாதல் இ னி து விளங்கற் பொருட்டுக் காரணமாம் பொருளை இடையிட்டு மொழிந்தமையின் ஆசிரியர் பொருளின் மாட்சி நன்கு விளக்கியருளினாரென்று உணர்க. மாணிக்கவாசகப் பெருமானும் திருக்கோவையாரில் “முனிவரு மன்னரு முன்னுவ பொன்னான் முடியும்” எனத் திருவாய் மலர்ந்தருளினர். சிந்தாமணியுடையாரும், “அப்பொருள் துன்னுங் காலைத் துன்னாதன வில்லையே” என்று கூறினார். அறமே யமையும்; பொருளைத் தொடுதலும் வேண்டாமெனக் கூறும் பௌத்த நூலார்கோட்பாடு உலகநெறிக்கு ஒருசிறிதும் இயையாதாகலின், அதனை மறுத்து ஆசிரியர், “பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் என்று உலகநெறியும் அகப்படுத்து விரிந்த நோக்கந்தான் அறவியல் விளக்கியருளிய நுட்பம் பெரிதும் பாராட்டற் பாலதாம்.

னி, ஆசிரியர் அறத்தை ருவகைப்படுத்து இல்லற வியலை முதலினும் துறவறவியலை அதன்பின்னும் நிறுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/206&oldid=1579831" இலிருந்து மீள்விக்கப்பட்டது