உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

யருளினார். 1“

மறைமலையம் 10

உவர்ப்புத்தோன்றி, அறிவு

அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலுந், துறவோர்க்கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின், விருந்தெதிர் கோடலும்” ஆகிய கடமை வழுவாது இல்லறவொழுக்கத் தின் கண்ணராய் நிலைபெற்று ஐம்புலன்களும் ஆரத்துய்த்துக் காமவின்பத்தில் முறுகித் துறவறத்தை மேற்கோடலே மரபாதலானும், அவ்வாறு மேற் காள்ளப்படுந் துறவறவொழுக்கம் உறுதி மிகவுடைத்தாய் விடுதலைப் படுவித்தல் ஒருதலையாதலானும் இல்லறவியல் முன் வைத்து விளக்கப்பட்டது. புன்முதலான ஓரறிவுயிர் தொடங்கி ஆறறிவுடைய மக்களீறாக மன்னுயிரெல்லாம் ஆண்பெண் என்னும் இருபாற்கட்டு ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டு இன்பம் நுகர்ந்து போதுகின்றனவாகலின், இந்நுகர்ச்சிநெறி றைவன்றன்னால் நிறுத்தப்பட்ட இயற்கையேயாகும். இவ்வியற்கையொடு பொருந்தத் துறவறம் நடாத்துதலே முறையாகலின் ஆசிரியர் கொண்ட மரபே நன்மரபாம். ஏனைப் புத்தர் சமணர் முதலாயினார் இல்லற வியற்கையொடு மாறு பட்டுத் துறவறமே மேம்பாடுடைத்தெனக் கூறுவதும், உலகாயதர் துறவறத்தோடு பெரிதும் முரணி இல்லறமே உறுதியுடைத்

தனக் கூறுவதும் பொருந்தாமை காட்டி,

அவை

யிரண்டற்கும் நடு நிகர்த்ததாம் ஒரு விழுப்பமுறையானே ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் அவையிருபாலும் ஒருங்குதழீஇ அவற்றின் கண் ஒழுகுமாறு இறைவன் வகுத்த முறையுணர்ந்து உரைத்தாராகலின், இதுவே எல்லாரானுங் கடைப்பிடித்துப் போற்றப்படுஞ் சீர்மை பெறலாயிற் றென்றறிக.

இனி, இவ்வில்லறவியல் இருபது அதிகாரங்களுடைத்து. தில் அன்பு, விருந்தோம்பல், இன் சொற்புகறல், பிறர்க்கு இன்னாசெய்யாமை, பொறை முதலிய அறங்கள் இனிது விளக்கப்படுதல் காண்க. இனித் துறவறவியல் பதின்மூன் றதிகாரங்கள் உடைத்து. இதன்கண் அருள், கொல்லாமை, பொய்யாமை, மெய்யுணர்தல் முதலிய அறங்கள் நன்கு விளக்கப் பட்டமை காண்க. அற்றேல், கொல்லாமை, பொய்யாமை என்றிவற்றை இல்லறவியலின்கட் சொல்லாது துறவறத்திற்கே வரைந்து வைத்துரைத்தவா றென்னை யெனில்:- புன் முதலியனவும், எறும்பு ஈ என்றற்றொடக்கத்துயிர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/207&oldid=1579832" இலிருந்து மீள்விக்கப்பட்டது