உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

183

இறவாமைப் பாதுகாத்தொழுகல் இல்வாழ்வார்க்குக் கூடாமை யானும், இல்வாழ்வார்க்குக் கொலைத்தொழில் ஒரோவிடத்துக் குற்ற மாகாதென்பதற்கு ஆசிரியர், “நன்றாகு மாக்கம் பெரிதெனினும்” என்று கூறுதலே சான்றா மாகலானும், "பொய்துறந்தார்க்கல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின்” என்று பரிமேலழகியார் தாமும் உரை கூறுதலானும் பயனில சொல்லாமை இவ்வறங்களெல்லாந் துறவறத்திற்கே உரியவாயின வென்றறிக. மக்களாற் செய்யலாகா தவற்றை வற்புறுத்தலாற் போதரும் பயன் சிறிது மின்மையான், ஈண்டாசிரியர் அந்நுட்பம் மிக நுணுகி யறிந்து, அவரவர் நிலைக்கியைந்தவகையான் அறவுரை கூற ஒருப்பட்ட அருட்டிறத்திற்கு எம்போலுஞ் சிற்றறிவினார் யாது கைம்மாறு புரிய மாட்டுவார்? வட மொழி மிருதிநூல்கள் மக்கள்நிலையும் அந்நிலைக்குரிய ஆற்றலுஞ் சிறிது மோராது தமக்குத் தோன்றிய பல்வேறு வகைப் பயனில் ஒழுகலாற்றினைத் தொகுதி தொகுதியாகக் கூறிப் பின் அவற்றைக் கைக்கொள்வார் இல்லாதொழியவே வறியவாயின; நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தல் வேண்டுமெனக் கூறிய மிருதி நெறி எக்காலத்து எவரான் மேற்கொள்ளப் பட்டது? ஆசார காண்டத்தில் ஒருவன் வைகறையில் விழித்தெழுந்து இரவிற் கண்டுயில் கொள்ளச் செல்லும் அளவுஞ் செயற்பாலவென வற்புறுக்கப்பட்ட னைகள் எக்காலத்து எவரான் தழுவப்பட்டன? என்றும் எவராலு மில்லையென்க. அற்றேல் அஃதாக, கொல்லாமை பொய்யாமை முதலிய அறங்கள் துறவோர்க்கே வரைந்து சொல்லுதலின், உயிர்களைக் கொன்று புலாலுண்டலும் பொய்த்தலும், இல்லறத்தார்க்கு ஆகுமோ வெனின்;- சிறிதும் ஆகாது. கொலைமை யுள்வழி உயிர்கள் மாட்டு அன்பு செய்த லாகாமையின் அன்புடைமை என்னும் அறம் வற்புறுப்பவே கொல்லாமை புலான் மறுத்தலென்னு மிரண்டும் இல்லற வொழுக்கத்திற்கு இன்றியமையாதன வென்பது தானே போதரும். நடுவுநிலைமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை என்னும் அதிகாரங்களால் பொய்யாமை யறம் இல்வழி அவை நடைபெறாமை திண்ணமென்பது புலப்படுதலின் அதுவும் அவ்வொழுக்கத்திற்கு இன்றியமையாததேயா மென்க. கால்லாமை பொய்யாமை என்னும் அவ்விரண்டையும் துறவறத்திற்குப் போலச் சாலவும் போற்றி யொழுகல் இல்லற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/208&oldid=1579833" இலிருந்து மீள்விக்கப்பட்டது