உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் -10

வொழுக்க முடையார்க்கு மாட்டாமை பற்றி அவை யங்ஙனம் வெளிப்படையாய் வற்புறுத்துக் கூறப்படவில்லை யென்றுணர்க.

பொருட்பால்

இனிப் பொருட்பாலுள் அறந்திறம்பா நெறியார் பொரு ளீட்டுமாறும், அது தன்னைப் போற்றித் தானுந்துய்த்துப் பிறர்க்கும் ஆர்த்துமாறுங் கூறப்படும். இது மட்டுமே கூற வேண்டியவர் அரச னீதி யுணர்த்தப் புகுந்த தென்னை யெனின்;- நாட்டின்கண் மெலியார் பொருட்டிரளை வலியார் கவராமல் நாடு வளம்படுத்து, வாணிகம் பெருகி நடைபெறச் செய்வித்து, நல்லார்க்குத் தீதுபுரியுங் கொடியாரை ஒறுத்து முறைசெய்யும் மன்னன் இல்வழிப் பொருள் கடைக்கூட்டுதல் ஆகாமையின் எடுத்துக்கொண்டா ரென்க.

அரசனீதி கூறுவான்

அப்பால், அரசியல், அங்கவியல், குடியியல் என்னும் மூன்று பகுப்புடைத்து. மூன்றாவது பகுப்பு ஒழிபியல் என்று பெயர் கூறப்பட்டதாலோ வெனின்;- அற்றன்று. அரசன் செங்கோல் நடாத்து முறையும், அவனுக்குத் துணைக் காரணமாம் அங்கங்களின் இயல்புங் கூறியபின், அவ்வரசனாற் பாதுகாக்கப்படுங் குடிமக்கட்கு உரிய ஒழுகலாறு சொல்லல் வேண்டுமாகலானும், ஆசிரியர் நூலியற்றுகின்ற காலத்துக் குடியியலென்றே பெயர் கூறினாரென்பதற்குப் போக்கியார் என்னுஞ் சங்கப் புலவர் பொருட் பாலியல் அதிகாரத்தொகை கூறுகின்றுழி,

“அரசிய லையைந் தமைச்சிய லீரைந்

துருவல் லரணிரண்டொன் றொன்கூழ்-இருவியல் திண்படை நட்பும் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை'

என்று இதன் இறுதியிலுள்ள பகுதிக்குக் குடியியலென்று பெயர் கூறியவாற்றாலும் நன்கறியப்படும். அப்பெயரை மாற்றினார் பரிமேலழகியாரோ, அன்றி அவர்க்கு முற்பட்ட உரை யாசிரியரோ இன்னாரென்பது தெளியப்படவில்லை.போக்கியார் செய்யுளிற் காணப்பட்ட முறையானன்றிப் பொருட்பாலை மூன்று பகுப்பாக்கி யுரைசெய்தாரும் பிற்காலத்தவரே யாகலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/209&oldid=1579834" இலிருந்து மீள்விக்கப்பட்டது