உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

185

அவர் தம்மானே குடியியல்' 'ஒழிபியல்' என்று மாற்றப் பட்டது போலும் என்க. இனி, 'அரசியல்' இருபத்தைந்து அதிகாரத்தானும், ‘அங்கவியல்' முப்பத்திரண்டு அதிகாரத் தானும், ‘குடியியல்' பதின்மூன்றதிகாரத்தானும் வைத்து விளக்கப் பட்ட ன. இம்மூன்றியலுள்ளுங் கூறிய பொருளருமைகளை ஈண்டு விரிப்பின் அவை மிகப் பெருகுமாதலால் அதிகார வாராய்ச்சியுட் காட்டுதும். பொருட்பாலிற் கூறிய நீதிகள் சிறப்பு வகையால் அரசற்கே உரியவாயினும், பொதுவகையால் அவனாற் புரக்கப்படும் எல்லார்க்கும் உரியவென்பது பரிமேலழகர் களவியலிற் கூறியவாற்றால் துணியப்படும். இது கிடக்க.

னிக், காமத்துப்பாலில் எவ்வாற்றானுங் குறைபடுத லிலராகுந் தலைமகனுந் தலைமகளும் உழுவலன் பின் முதிர்ச்சியான உள்ளம் உருகி ஒருமையுற்று இன்பநுகர்தற் சிறப்புக் கூறப்படுகின்றது. இவ்வின்பம் அறத்தின் பயனாகத் துய்க்கப்படும் விழுப்பேறாகலின், அவ்வறம் இருவகைத் தாதல் போல இதுவும் ருவகைத்தாதல் வேண்டும். இல்லறத்தின் ஈடுபட்டு ஒழுகும் மனைக்கிழவனுங் கிழத்தியுந் துய்க்கும் இன்பநெறியும், துறவறத்தின் மேம்பட்ட அறவோர் இறைவன் றிருவடிப் பேற்றினைத் தலைப்பட்டுத் துய்க்கும் இன்பநெறியுமான இரண்டும் இவ்வியலின்கண் உணர்த்தப் படுகின்றன. இவற்றுள் இல்லறத்தின்வழித் துய்க்கப்படும் ன்பநெறி மாத்திரையே உரைகாரர் விளக்கினார்; னையது இது கொண்டுணரப்படுதலானும், தெளிவுபெற விரித்து அறிவித்தற்கு அருமையுடைத்தாகலானும் அதனை விளக்கிற்றிலர். இவ்வாறே திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச் செய்த திருவாதவூரடிகளும் ‘அறிவன் நூற்பொருளும் நூல்வழக்குமென, இருபொருளுநுதலியெடுத்துக் கொண்ட’2மையும், அவற்றுள் ‘உலகநூல்வழியின் நுதலிய பொருள்' மாத்திரையே உரையுள் உரைக்கப்படுமென்பதும் ஆண்டுப் பேராசிரியர் இனிது விளக்கியருளினார். முதல்வன் திருவடிப் பேற்றின்கட் டோன்றும் பேரின்பமே தலைவி யாகவும், அவ்வின்பத்தினைப் பெறுதல்வேண்டிக் குறையிரக்கும் அறிவனுயிரே தலைவனாகவுங் கொள்ளப்பாற்று. இறைவன் றிருவடியே பேரின்பவுருவாகுமென்பது நச்சினார்க்கினியரது திருமுருகாற்றுப்படை யுரையானும், "தாட்டாமரைகாட்டித்

உலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/210&oldid=1579835" இலிருந்து மீள்விக்கப்பட்டது