உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் 10

தன் கருணைத் தேன்காட்டி என அதனை உண்மையான் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தவாற் றானும் அறிந்துகொள்க.

இனி, இக்காமத்துப்பால் களவியல், கற்பியல் என இரண்டு பகுப்புடைத்தாம். இவற்றுட் களவியல், ஏழதிகாரங்களுடைத்து. கற்பியல் பதினெட்டதிகாரங்களுடைத்து. இன்னும் இவ்ற்றின் பரப்பெல்லாம் அதிகார வாராய்ச்சியுட் காட்டுதும். இங்ஙனம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை யுறுதிப் பொருளுங் கருக்கொண்டு நிறைய நூற்றுமுப்பத்து மூன்றதி காரங்களிலே இயற்றப்பட்ட இவ்வரிய பெரிய நூலுக்கு, வடமொழி நான்மறையுள்ளிட்ட எந்நூலும் ஒப்பாகாதென்பது தோன்றப் பாரதம் பாடிய பெருந்தேவனார்,

“எப்பொருளும் யாரும் மியல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பரு-முப்பாற்குப் பாரதம்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்”

என்று கூறினார்.

அடிக்குறிப்புகள்

1.

சிலப்பதிகாரம்

2.

பேராசிரியர், பாயிரவகவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/211&oldid=1579836" இலிருந்து மீள்விக்கப்பட்டது