உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

5. ஆக்கியோன் வரலாறு

இனி, இங்ஙனம் பிறவற்றிற்கில்லாப் பெருஞ்சிறப்புற்று, அருமைபெருமை மிகவுடைத்தாய் ஆன்றோர் ஒழுக்கநெறிக்கட் லைநின்று விளங்கும் இத்தெய்வத் திருக்குறணூலின் ஆசிரியரான தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் வரலாறு ஒரு சிறிது உரைக்கப்படும். ஆசிரியர்க்கு வள்ளுவர் என்னும் பெயர் அவர் சாதி பற்றி வந்த தொன்றேயாம். வள்ளுவர் என்போர் பறையருட்குருமாராய்க் குறி சொல்லிப் பிழைக்கும் ஒரு வகுப்பார்.

ச்சொல் 'வள்' என்னும் முதனிலையிற் பிறந்து தோல் வினைஞர் என்னும் பொருட்டாம். வள்பு என்பது தோலிற் செய்த வாரை யுணர்த்துதல், “மாசற விசித்த வாருறு வள்பின்” என்னும் புறநானூற்றானும், “வள்பு தெரிந்தூர்மதி வலவ என்னும் ஐங்குறுநூற்றானுங் கண்டுகொள்ளப்படும். வாரினால் இறுக்கிக் கட்டப்படும் பறையறிவிக்கும் வினையினைச் செய்வோர் வள்ளுவர் ஆவர். இங்ஙனம் பறையறிவித்தற் றொழிலுடையோர் பண்டைக் காலத்துப் பறையராயினது பற்றி அவர்க்கு வள்ளுவர் என்னும் பெயர் வழங்கியது எனவும், அவர் தம்முள் ஒரு சாரார் பிறர் தமக்கு நேரும் ஊழ்வினைப் பயன்களை நன்கறிந்துரைக்கும் அவ்வினையும் பின்நேர்வதனைப் பறை சாற்றி யறிவிக்குந் தொழிலோடு ஒப்புமை யுடைத்தாகலான் அவர்க்கே பின் அப்பெயர் சிறப்புவகையான் உரிமையுடைத் தாயிற் றெனவுந் துணியப்படும். கல்வியறிவு சிறிதுமில்லாப் பறையர்க்குட் கோள் நூற் புலமை நிரம்பிப், பிறர்வினைப் பயன்களை அளந்துரைக்கும் வள்ளுவர் அவரின் வேறாய் அவர்க்குக் குருமாராய் அமைந்து பாராட்டப் பெறுதல் இயற்கையேயாம்; இப்பெற்றியரான வள்ளுவரிற் சிறந்த ஒரு நன்மகனால் எடுத்து வளர்க்கப்பட்டது கொண்டு ஆசிரியர் வள்ளுவரெனப் பெயர் பெறுவாராயினர்.இப்பெயர் ஆசிரியர்க்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/212&oldid=1579837" இலிருந்து மீள்விக்கப்பட்டது