உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் 10

சாதிபற்றி வந்ததென்பது, அவரோடு ஒரு காலத்தினரான மாமூலனார்,

66

'அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்

திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும்

வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்

என்று கூறுமாற்றால் இனிது விளங்கும். இஃதுணராதார், ஆசிரியர் அரியபெரிய பொருள்களை உலகிற்கு வழங்கி யருளின வள்ளன்மை தோன்ற அவர்க்கு வள்ளுவர் எனும் பெயர் சிறப்பதாயிற்றென்பர். அச்சொல் அவர் கூறுமாறு வள்ளன்மைப் பொருள் குறிப்பதாயின் வள்ளல் என நிற்பதன்றி வள்ளுவர் என நில்லாமையின் அது பொருந்தாக் கூற்றாம். தொல்லாசிரியர் நூலுரைவழக்கில் யாண்டும் வள்ளுவர் என்னுஞ் சொல் வள்ளன்மைப் பொருள் தரக்காணாமையின், அச்சொல்லுக்கு யாங் கூறியதே உண்மைப் பொருளாதல் திண்ணம் என்க. தமிழ்க்கவிசரிதமுடையார் “வள்ளுவன் என்னுஞ் சொல்லிற்குக் கற்றுணர்ந்தவன் என்பது தாதுப்பொருள்” என்கிறார். வள் என்னும் பகுதியாலுணர்த்தப்படும் பலபொருள்களுட்

கற்றுணர்தல் என்னும் பொருள் யாண்டும் பெறப்பட்ட வாறில்லை. வள் என்பது செழுமை என்னும் பொருளில் வருமாகலின் ஈண்டைக்கேற்பக் கல்விச் செழுமை என்று பாருள் உரைத்தலே எமக்குக் கருத்தாமால் எனின்;- அது பொருந்தாது. வள்ளென்னும் பகுதியே கல்விச் செழுமையினை உணர்த்தாது; அது விகுதி முதலிய உறுப்புகளோடு இயைந்து ஒரு சொற்றொடரில் ணந்து நின்றுழித் தந்த பாரு ளுக்கு இணங்க ஓரோவோரிடத்து அப்பொருளுணர்த்துதற் கமையும், இனி, அஃதங்ஙனமுணர்த்துவதும் பம், அம் எனும் விகுதிகளொடு புணர்ந்து வளப்பம், வளம் என நிரம்பிய வழிச் சொல் வளப்பம், கல்விவளம் என்னும் பொருளுணர்த்து தற்கு ஏற்பதாம். வள்ளுவர் எனுஞ் சொல்லிற் பகுதிக்கு வேறு பொருளுண்டென்பது முன்னரே காட்டினாமாகலானும், விகுதி முதலியன வேறுபட்டமையானும் இதற்கு அப்பொரு ளுரைத்தல் சாலாதென்க. இன்னுமப் பொருள் பொருந்தா தென்பதற்கு அவர் காட்டிய மேற்கோள்களே அமையுஞ் சான்றாம். இது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/213&oldid=1579838" இலிருந்து மீள்விக்கப்பட்டது