உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

இனி, ஆசிரியர் பிறப்புவரலாறு சிறிது காட்டுதும்:

189

இவர் தந்தை பகவன் என்பதும் தாய் ஆதியென்பதும் தொன்றுதொட்ட வழக்காய் அறியப்படுகின்றன. இவர்தம் இளவலான கபிலரால் அருளிச் செய்யப்பட்ட அகவலில்,

“அருந்தவ மாமுனி யாம்பக வற்கு

1

1இருந்தவா ரிணைமுலை யேந்திழை மடவரல் ஆதி வயிற்றினி லன்றவ தரித்த

கான்முளை யாகிய கபிலனும் யானே'

எனப் போந்தபகுதியானும் இவ்வுண்மையினிது புலப்படும்.இவர் தந்தைக்கு யாளிதத்த முனிவர் என்னும் வேறுமொரு பெயர் உண்டென்று ஞானாமிர்தத்தில் ‘அறப்பயன்றீரின்' என்னும் அகவலில்,

“யாளி, கூவற்றூண்டும் ஆதப் புலைச்சி காதற் காசினி யாகி மேதினி

இன்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே'

என்பதற்கு விரிந்த "யாளிதத்தமுனிவன் தனக்கு விகிர்தமாய்த் தன்னாலே வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட அறிவில்லாத சண் ாளப் பெண்ணை, ஓர் பிராமணன் எடுத்துக் கொண்டுபோய் உத்தர பூமியிலே வளர்த்துப் பின்பு இவனுக்கே கொடுக்கச் சினேகத்துக்குக் கிருப்பிட மானவளாய்ப் பிராமணியாய்ப் பூமியிலே நிற்கும் இனிய கீர்த்தியை யுடைய கபிலருள்ளிட்ட ஏழு பிள்ளைகளையும் பெற்றனளன்றோ இவ்விடத்திலே” என்னும் பழையவுரையால் நன்கு தெளியப் படுகின்றது. இன்னும் இதனானே, அவ்யாளி தத்தமுனிவர் துறவொழுக்கத்திலே விளங்கினா ரென்பதூஉம், இவர் தாம் துறவு நடாத்துகின்ற விடத்துப் பணிப்பெண்ணாய் இவரிட்ட ஊழியஞ் செய்து கொண்டிருந்த ஒரு புலைப்பெண், தன் அறியாமையினால் இவர் மிக வெகுளுமாறு ஏதோவொரு பிழைசெய்ய, அதனால் இவர் அவளைக் கிணற்றில் அடித்து வீழ்த்திப் போயினாரென்பதூஉம், அதன்பின் அக்கிணற்றருகே சென்ற ஒரு பார்ப்பனன் அவளை யெடுத்துக்கொண்டு வடநாடு சென்று சிறக்க வளர்த்துப் பின்னுந் தெய்வச் செயலாய் தன்மாட்டு வந்த அவ்யாளி

நிலைபேறுற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/214&oldid=1579839" இலிருந்து மீள்விக்கப்பட்டது