உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் - 10

தத்தருக்கு இவளை மணம் புகுத்த, இவளும் அவர்க்கினிய மனையுரிமைக் கிழத்தியாய் அமைந்து கபிலர் முதல் எழுவரைப் பயந்தாளென்பதூஉம் தொகுத்துரைக்கப்பட்டவாறு காண்க. இதன் கண் இவளை ‘ஆதப்புலைச்சி' என்றே மொழி யடுத்து வழங்கினமையின், அப்புலைப்பெண் மகளிர்க்குரிய நால்வகைக் குணங்களில் அறியாமைக் குணம் மிகப் பெற்றிருந்தா ளென்றும், அவட்குரிய அவ்வறியாமைக் குணம்பற்றியே ‘ஆதி' எனக் காரணக்குறியடுத்துப் பெயர் வழங்கினாரென்றும் உணர்க. ஆதம்' என்பது ‘அறியாமை என்னும் பொருட்டாம்; ஆதமுடையாள் ஆதி என்க. மகளிர்க்குரிய கள்ளங்கவடு முதலிய விரகறியாது வெள்ளைமையுடைய உள்ள நலம் உடையரா யிருந்தது பற்றி இவர் தம் சிறப்பறியாப் பித்தவுலகினர் ‘அறியாதவள்' என்னும் பொருள்பட உலகன்னை யாவாரை ஆதி' எனப்பெயர் வழங்கினர். தீயசொல்லுந் தீயவொழுக்கமுந் தீதுடை நெஞ்சமும் இலராயின்மையின் அன்றே இவர் பயந்த மக்கள் எழுவரும் பெருந்தகையாளராய் விளங்கி உலகை நன்னெறிப் படுத்துவாராயினர்.

இனி, இவர் தந்தை அறவொழுக்கத்திற்றலை நின்று மேதகு குணங்களாற் பொலிந்தனராயினும் பிறர் பிழை கண்டவழிப் பொறாது மிகுவெகுளும் இயல்பினரென்பது. இவர், சிறு பருவத்தினளாய் அறியாமையிற் பிழைசெய்த அப்புலைப் பெண்ணைக் கிணற்றில் வீழ்த்தினமையானே நன்கு துணியப் படும். நல்ல ஒழுக்கத்திற்றாம் ஒரு சிறிதும் வழுவுதலில்லார் பிறர் பிழைகண்ட வழிப் பொறாதுவெகுண்டு அவரை ஒறுப்பர். அவ்வாறு தமக்குச் சடுதியில் அவர்மேல் எழுந்த வெகுளியால் அவரை ஒறுப்பராயினுந், தமது வெகுளிமாறிய மற்றை நேரத்தே தாம் ஒறுத்ததனால் அவர் வருந்துவது கண்டு மிக இரங்குவர். இத்தகையதோர் இயற்கை மிகப் பெரியாரிடத்தே பெரும்பாலுங் காணப்படுகின்றது. கொடுந்தொழில் புரிதலே தமக்கியற்கை யாகவுடைய கயவர் இங்ஙனம் ஒருவர்க்குக் கதுமெனத் தீங்கு இழையார்; மிக ஆய்ந்து தீங்கியற்றிப் பின் அது பற்றி ஒரு சிறிதும் இரங்குவதில்லாக் கன்மனம் உடையராவர். திருவள்ளுவ னார் 'பொறையுடைமை' எனும் அதிகாரம் வரையும் பொழுதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/215&oldid=1579840" இலிருந்து மீள்விக்கப்பட்டது