உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் ஆராய்ச்சி

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது”

191

(குறள் 29)

என்னுந்திருக்குறட்பா வருளிச் செய்யும்பொழுதுந் தந் தந்தையார் வெகுட்சியினையும், அவர் தந் தாய்க்கு இழைத்த கொடுமை யினையும் நினைந்து எழுதினாரென்று கோடல் இழுக்காகாது. இவர் தந் தமக்கை ஔவையாரும், “விற்பிடித்து, நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே, சீரொழுகு சான்றோர் சினம்” என்ப துரைத்துழித் தந்தையை நினைந்தாரென்பது குற்றமாகாது.

இனி, அப்பகவன் என்பவர் ஆதியை மணந்த பின்றை ஓர் ஊரிலேயே நிலைபெறுவதின்றிப் பலப்பல வூர்கட்குஞ்சென்று ஆங்காங்குச் சின்னாள் தம் மனைவியுடன் உறைந்தனர். ஆழ்ந்த அறிவுடையார் ஒரேயிடத்தில் நிலையாக விருத்தற்கு விரும்பார். ஒரே வகையான பொருட்களை நாடோறும் காண்டலில் மிக வெறுப்புக்கொள்வர். பலவயிற்சென்று பல நிலவளங்களையும், உலக இயற்கைத் தோற்றங்களையும், ஆங்காங்கு உறைதரும் மக்கள் ஒழுகலாறுகளையுங் கண்டு கண்டு அவற்றின் கண்ணெல்லாம் இறைவன் அருளும் அறமும் விளங்கப் பெறுதலை நினைந்து வியந்து இன்புறுவர். இங்ஙனமே இப்பகவன் என்பவர் பலநாடுகளுந் திரிந்து உலகியலறிவின் முதிர்ச்சிப் பேற்றால் திண்ணிய நுண்ணறிவு வாய்ப்பப் பெற்றமையான் அன்றே, இவரைத் தெள்ளிவடித்த தேறலாய்ப் பிறந்த திருவள்ளுவனார் உலகவியல் முற்றும் ஒருங்குணர்ந்து நூலருளிச் செய்வாராயினர்.

இங்ஙனம் பகவனும் ஆதியும் ஊற்றுக்காடு என்னும் ஊரில் வைகி வாழ்ந்து வருகையில் அவர்க்கு உப்பை என்னும் ஒரு பெண் மகவு பிறந்தது. அதனை ஆங்குச் சின்னாட்போற்றி வளர்த்துத் தாமிருந்த இல்லத்தருகேயுள்ள அகத்தில் வண்ணார் தமக்குப் பிள்ளைப்பேறின்றி வருந்துதலைக் கண்டு இரங்கி, அவர்க்கு அதனை ஈந்து, பின் அவர் காவிரிப்பூம் பட்டினஞ் சென்று ஆங்கிருந்தனர். அங்கிருக்கையில் உறுவை, ஒளவை என வேறிரு பெண்மகப் பிறந்தன; அம்மகாரையும் மகப்பேறின்றிக் குறையிரந்த கள் வினைஞராகுஞ்சான்றார்க்கும். யாழ் இசைக்கும் பாணர்க்குமாக முறையே நல்கிப் பின் அவ்விருவருங் குறவர் தம் உறையுளான ஒரு மலைச்சாரலிற் சென்று

வைகினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/216&oldid=1579841" இலிருந்து மீள்விக்கப்பட்டது