உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

❖ LDMMLDMELD-10 மறைமலையம்

ஆங்கிருக்கையில் வள்ளி என்னும் மற்றுமொரு பெண் பிள்ளை பிறந்தது; அம்மலைத் தலைவனான குறவன் தனக்கு மகப் பேறின்மையால் வருந்துதல் கண்டு அவனுக்கும் அப்பிள்ளை யினை நல்கி, ஆண்டு நின்றும் பெயர்ந்து தொண்டைமண்டிலஞ் செய்த பெருந்தவப்பயனால் அவர் இருவருந் திருமயிலாப் பூர்க்கு வந்தனர். அங்கு அவர் வாழ்க்கையில் அவராற்றிய தவப்பயனெல்லாம் ஓர் உருவாய்த் திரண்டு கொழுந்தமிழ் மணங்கமழுந் திருவாயும் அருள் துளும்பும் பொறை நோக்கமுமுடையதாய் வந்தாலென்ன ஓர் ஆண்மகப் பிறந்து இளவளஞாயிறெனப் பிறங்கிற்று. இவ்வரிய பிள்ளை வளர்ந்த பின்றை யுலகத்தார் திருவள்ளுவர் என்னும் அருந் திருப் பெயரிட்டு வழங்கி மகிழ்ந்தனர். பின்னர் பின்னர் அவர் அவ் விடம் விட்டுப் பெயர்ந்து வஞ்சி நகரஞ் சென்று இருப்புழி அங்கு மற்றுமோர் ஆண்குழவி பிறந்தது. அதனை அவ்வூரிற் பெருந்திரு வாழ்க்கை யுடையவனாய்ப் பிள்ளைப் பேறின்றி வருந்திய அதியமான் என்பவற்குக் கொடுத்துப் போயினர். அதியமானால் வளர்க்கப்பட்டமையின் அப்பிள்ளை அதியமான் அஞ்சி யெனப் பெயர் வாய்ந்து வள்ளற்றன்மையில் வயங்கிற்று. அவர் பின்னர்த் திருவாரூர் சென்று உறையும் நாளில் செந்தமிழ் செய்த தவப்பெருமையால் கபிலன் எனப் பெயரிய மகப்பிறந்ததாக அவனை அவ்வூரில் ஓர் அந்தணர் கையின் நல்கிச்சென்றார். இவையெல்லாங் கபிலர் தாமே கூறிய,

66

என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில் ஆண்பான் மூவர் பெண்பால் நால்வர்; யாம்வளர் திறஞ்சிறி தியம்புவல் கேண்மின் ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்; காவிரிப்பூம் பட்டினத்திற் கள்வினைஞர் சேரியிற் சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள்; நரப்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியிற் பாண ரகத்தில் ஒளவை வளர்ந்தனள்; குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்; தொண்டை மண்டிலத்தில் வண்டமிழ் மயிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/217&oldid=1579842" இலிருந்து மீள்விக்கப்பட்டது