உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

நீளாண்மை கொளும் வேளாண் மரபுயர்

2துள்ளுவ ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்; அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி

அதியமா னில்லிடை யதியமான் வளர்ந்தனன்; பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில்

அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.”

193

என்னும் வரலாற்றினால் இனிது பெறப்படுவனவாம். இங்ஙனம் ஆதிபகவ ரிருவருந் தம் மக்களை இரந்து வேண்டினர்க்கு வழங்கிப்போயினும், அவர்களெல்லாரும் பருவமுதிர்ந்த பின்றை அவர்களைப் போய்க்கண்டு அவர்க்குத் தாம் தாய்தந்தைய ராதலும் அவர் பிறந்த வரலாறும் உணர்த்தி வாழ்ந்தன ரென்பது உய்த்துணரப்படும். என்னை? இவ்வாறு அவர்தம் மக்கட்குப் பிற்றை நாளில் அறிவுறுத்திலராயின், குழவிப் பருவத்தே பிறர்க்கு ஈந்திடப்பட்ட கபிலர் பின்னர் தந் தாய் தந்தையரும் உடன் பிறந்தாரும் ன் பிறந்தாரும் இன்னாரென்பதும் அவர் வரலாறுங் கிளந்துரைத்தல் முடியாதாகலின் என்க. இனிக் கபிலர் வளர்ப்புத்தாய் தந்தையர்க்கு ஆதிபகவர் விரித்துரைத்த தம் வரலாற்றினைப் பிற்றை ஞான்று அவர் அவர்க்குத் தெரித்தனர் என்பார்க்கு, ஆதிபகவர் தாம் பயந்த மக்களை வழிநாட்களிற் கண்டு மகிழாத வன்கண்மை யுடையராயினார் என்று சொல்லல் வேண்டுதலின் அது குற்றமாம் என்க.

இனி, இவ்வகவல் எளிய தமிழ் நடையில் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அதன் பொருட் பெருமை உணர மாட்டாதார், இது கபிலர் இயற்றியதுதானா வென்று ஐயுறுவர். கபிலர் தமக்கு அவர்தம் வளர்ப்புத் தாய் தந்தையர் பூணூல் பூட்டுகின்ற ஞான்று ஆண்டுக் குழுமிய பார்ப்பன மாக்கள் இவர்க்கு அது செய்யலாகாதென்று தடுத்த வழி, அவர்க்கு அறிவு கொளுத்தும் பொருட்டு இவ்வகவல் அவரால் அருளிச் செய்யப்பட்டது. செந்தமிழ்ப் புலமை நிரம்பாத அப் பார்ப்பனக் குழுவில் திரிசொற் புணர்த்தி அதனை அருளிச் செய்தனராயின் அவர் சொல் ஆண்டைக்குப் பயன்படாதா யொழியும். இஃதுணர்ந்து இனிய செந்தமிழ் இயற்சொற்களாற் பெருந்தன்மையான செய்யுள் நடையிலே அறப் பொருட்டுறைகளை விளங்க அமைத்து அறிவுறுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/218&oldid=1579843" இலிருந்து மீள்விக்கப்பட்டது