உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 10

லாயினர்.பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய வற்றிலுள்ள கபிலரின் செய்யுள் நடைக்கும் இவ்வகவல் செய்யுள் நடைக்கும் பெருமைக்குணம் ஒரு தன்மைப்பட ஊடுருவி நிற்றல் அறிவுடையார்க்கெல்லாம் புலப்படும். நடை எளிமை அருமைபற்றி ஒருவரே இயற்றிய செய்யுட்களை வேறு வேறென்றல் அறிவிலார் கூற்றாம். அவ்விருவேறு நடையிலும் ஒத்து நிகழுங் குணமும் பொருளமைதியுமே ஆக்கியோனை யறிதற்குக் கருவியாவனவாம். இம்முறை வழுவாது கடைப் பிடித்துணரவல்லார்க்கு அறிவியல் நுண்பொருள்களைத் தெள்ளிய செந்தமிழ் இயற் சொன்னடையில் விளக்க எழுந்த கபிலரகவல் கபிலர்க்கே உரியதாதல் தெற்றெனப் புலப்படும்.

66

"இன்புறு நாளுஞ் சிலவே யதாஅன்று

துன்புறு நாளுஞ் சிலவே யாதலாற் பெருக்கா றொத்தது செல்வம் பெருக்காற் றிடிகரை யொத்த திளமை யிடிகரை வாழ்மர மொத்தது வாழ்நா ளாதலால், எனவும்,

“உயிரினை யிழந்த வுடலது தன்னைக்

களவு

கொண்ட கள்வனைப் போலக் காலு மார்த்துக் கையு மார்த்துக் கூறை களைந்து கோவணங் கொளுவி ஈமத் தீயை எரியெழ மூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப் போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது சலமெனப் படுமோ சதுரெனப் படுமோ பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்.”

எனவும்,

"திருவும் வறுமையும் செய்தவப் பேறும் சாவதும் வேறிலை தரணி யோர்க்கே குலமு மொன்றே குடியு மொன்றே இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே வழிபடு தெய்வமு மொன்றே யாதலான் முன்னோ ருரைத்த மொழிதவ றாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/219&oldid=1579844" இலிருந்து மீள்விக்கப்பட்டது