உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

197

பலவகைத் தீங்குகளையும் பயப்பிக்கின்றது!” என நம் ஆசிரியர் மிக ஆழ்ந்து நினைந்து, தம்மைப் புடைசூழ்ந்த மாணவர்க்கும் பிறர்க்கும் மக்கள் தம்முள் ஏற்றத் தாழ்வு கருதாது எய்தற் பாலதாம் மனவொருமைப்பாட்டை நன்கு விரித்து உரை நிகழ்த்துவாராயினர். ஆசிரியர் நெஞ்சம் நெகிழ்ந்துருக அருள்வழியராய் நின்று விரித்துரைத்த அருமையுரைகள் யாண்டும் பரவலாயின. மிக இழிந்த குலத்திற் பிறந்த யாரோ வள்ளுவப் பிள்ளையொருவன் மிகச் சிறந்த புலமை யுடையவனாய்த் திகழ்கின்றான் என்பது கேட்டார் பலரும் பல நாடுகளிலிருந்துந் தொகுதி தொகுதியாக வந்து இவரைக் காண்டற்குக் குழீஇயினார். பலதேயங்களிலுள்ள அறி

வுடைய நன்மக்களும் ஆசிரியர் அறவுரைகளைக் கேட்டு ய உய்தற்பொருட்டுப் போதருவாராயினார். ஆசிரியர் அவர் தம்மையெல்லாம் அருள் துளும்புங் கடைக்கண்ணால் விழைந்துநோக்கி, “அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்பு தோல்போர்த்த உடம்பு” என்னுங் குறட் பொருளை விளங்க அறிவுறுத்துதற்குப் புகுந்து, “அன்பர் காள்! நம்முடைய உயிரினுட் சாரமாய் அதற்கும் ஓர் உயிராய் நிலைபெறுவது அன்பு என்று அறிதல் வேண்டும். அன்பு உயிரின்கட்டோன்றும் இறைவனது அருள் விளக்கம் ஆகும். அவ்வருள் விளக்கத்தை உணர்வு சலியாது தம்மகத்தே அறிவுக் கண்கொண்டு விளங்க அறிந்து, அஃது எல்லாவுயிர் கண்மாட்டும் உயிராய்ப் பொலிதரும் நன்முறையும் உணர வல்லிரேல் அறியாமையின் உயிரைப்பற்றி வருகின்ற துன்பங் களெல்லாம் ஒருங்கே விலகும். அன்பு இல்வழி எல்லா உயிர்களும் உயிர் ஒழியப்போன வெற்றுடம்புகளேயாம். புழுத்தழியுந் தசைப்பிண்டங்களான அவ்வுடம்புகள் தம்முள் வேறுபாடு கற்பித்துக்கொண்டு அறமல்லவற்றை ஈட்டி மக்கட் பிறவிப்பயன் இழத்தல் நம்மனோர்க்குச் சிறிதும் பொருந்தாது. எல்லா வுயிர்களையும் நும் உயிர்போற் போற்றுமின்! ஓர் உயிர்க்கும் நும் மனத்தானுந் தீங்கு நினையன்மின்! நும்முடைய ஊன்பிண்டம் பெருக்கற்குப் பிறவுடம்பினைச் சிதைத்து உண்டல் ஒழிமின்! மன வொருமையின்றிக் கணக்கிறந்த பொருளை அழித்துக் கணக்கின்றிப் பல விலங்கினங்களை அறுத்து ஆரியர் செய்யும் வேள்வித் தொழிலிற் கருத்தினைப் புகுதவிடேன்மின்! நும்மால் இயன்றளவு பிறர் துயர் எய்தக் கண்ட வழி அது துடைத்தற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/222&oldid=1579847" இலிருந்து மீள்விக்கப்பட்டது