உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

❖ LDMMLDMELD-10 மறைமலையம்

ம்

வேண்டும் உதவியினை விரும்பிச் செய்ம்மின்! இரப்பவர்க்கு ல்லை என்னாதீர்! ஒருவர் செய்ந்நன்றியினை மறவாதீர்! செய்ந்நன்றி மறத்தலின் மிக்கபாவம் இல்லை! ஒருவர் தீது செய்யினும் அதனை மறந்து அவர்க்கு நன்மையே செய்ம்மின்! பிறர் அறியாமையாற் செய்யும் பிழைகளைப் பொறுமின்! அப்பொறையால் அன்பு முதிரப்பெற்று நும் உயிர் உடம் பெல்லாம் அவ்வன்பமிழ்தம் புரைகடோறும் நிறையப் பெறுவீர்! அதனான், நும் உடம்பும் உயிருந் தமக்குள்ள வாலாமை நீங்கித் தூய்தான அவ்வன்புருவாய்த் திரிந்து பொலிகுவிராதலால் நீவிர் இறைவனுருவேயாதல் திண்ணம். இறைவன் நும்மின் வேறாகான்; இறைவனின் நீவிர் வேறாகீர்! எல்லாம் அன்புருவாம்; எல்லாம் இன்புருவாம்” என்று கேட்போர் உள்ளங் கரையக் கரைய விரித்துரைப்பர். கேட்போர் பேரின்பப் பெருக்கில் முழுகினாற்போலப் பேரறிவு விரிதரப்பெற்று நம் ஆசிரியரைப் பிரிதற்கு இசையாது பலநாள் அவரோடு உடன் உறை வாராயினர். தமிழ்நாடெங்கும் ஆசிரியர் அருமை பெருமை விரைவில் விரிதரலாயின. தமிழ் நாடெங்குமுள்ள தக்கார் அனைவரும் ஆசிரியர் அருளுரையமிழ்தம் பருகுதற் பொருட்டுக் குழாங்கொண்டு போந்தனர். தம் அறிவுரை கேட்டு உய்தற்கு வந்தோர் ஒரு நீரரின்றி, இல்லற வொழுக்க முடையாரும், துறவற

வொழுக்க முடையாரும், அரசியல் வழிப்பட்டோரு

மாயிருந்தனர். அவரையெல்லாம் அன்பு நெறியிற்படுத்து நாடோறும் அறிவு கொளுத்துதற் பொருட்டுத் தாம் கூறவெண்ணிய நுண்கருத்துக்களையெல்லாம் அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பகுத்து ஒவ்வோர் அறப்பொருளையுஞ் சுருங்கிய பத்துத் திருக்குறளால் விளக்கி ஒவ்வோர் இயலாக்கிச் செந்தமிழ் நங்கையும், செந்தமிழ்ப்புலவரும், செந்தமிழ் நாடும் ஆற்றிய அறத்தின் பயன் எல்லாம் ஒருவழித் திரண்டெழுந் தாலென்ன, நூற்றுமுப்பத்துமூன் றதிகாரங்களிலே அரிய பெரிய தெய்வத்திருக்குறணூல் அருளிச்செய்திட்டார்.இவ்வரிய பெரிய நூற்பொருளையே ஆசிரியர் யாண்டும் விரித்து விளக்கு தலின் உலகம் நல்லொழுக்கத்திற் றலைப்பட்டுப் பிழைத்தது.

இங்ஙனம் ஆசிரியர் அறவுரை செய்தருகின்ற ஞான்றுத் தொக்க பெருந்திருவாளர் தம் பொருட்டிரளையெல்லாம் ஆசிரியர் திருவடியிற்கொண்டு உய்த்தவளவில், அவர் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/223&oldid=1579848" இலிருந்து மீள்விக்கப்பட்டது