உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

199

ஐம்புல அவாவுந் துவரத்துறந்த பெருநீர்மையுடைமையால், அதனைப் பகுத்துப் பல்லுயிர்க்கும் பலவகையான் வழங்கி ஓம்புதன் மேற்கொண்டு, தாம் தம் ஆள்வினையால் தமக்கு உணவு தேடிக்கொள்வர். எல்லாத் தொழிலினும் பாவமில்லா தது நெய்தற்றொழில் ஒன்றேயாகலின் தமக்கு வேண்டு மளவே அரைப் பணத்திற்கு நூல் வாங்கித் திறம்பட நெய்து, நெய்த ஆடையை ஒரு பணத்திற்கு விற்று, அதில் ஊதிய அரைப் பணத்தால் உணவுண்டு. மற்றை அரைப் பணத்தை முதலாக வைத்துக் கொள்வர். பிறர்பால் இரந்துண்டு துறவு நடாத்துவார் போலாது ஆசிரியர் மடிந்திராது தாமே முயன்று தமது திருமேனி யோம்பிய ஆள்வினையுடைமை துறவொழுக்கமுடையார்க்கு ஒரு நன்முறையாய் வியக்கப்படுதல் காண்க. ஆசிரியர் மிக விரிந்த வளங்கள் தொகுத்து இனிது காலங் கழித்தலை விழையாது, சுருங்கிய செலவால் வேண்டுந் துணையே வாழ்க்கை நடாத்தினா ரென்பதற்கு, அவர் அருளிச் செய்த “ஆகாறளவிட்டிதாயினுங் கேடில்லை, போகாறகலாக் கடை” என்றோதுதலே சான்றாதல் காண்க.இவரருமைத் தமக்கையார் ஒளவையும் இங்ஙனமே வாழ்க்கை நடாத்தினாரென்பது, “உண்பது நாழியுடுப்பது நான்கு முழம்” என்றோதினமையால் நன்கு துணியப்படும்.

இனி, இவ்வாறு ஆசிரியர் ஒழுகுகின்ற காலையில் இளமைப் பருவம் நிரம்பிற்று. இவர் இளமைப் பருவத்துண்டாம் ஐம்புலக் குறும்புகளையும் ஆமை தன்னுறுப்பினை அடக்குமாறுபோல டர் புகுதாமல் ஒடுக்குவர். தம்மொடு தலைப்பெய்த தக்காருடன் அறிவியற்கையினையுங் கல்விச் சிறப்பினையும் எடுத்துப்பேசி அவர்க்கெல்லாம் அவற்றின் மெய்ப்பொருள் காட்டுவர். தம்முடம்பிற்கு உணவூட்டு தலையுங் கல்வி கேள்விகள் முடிந்த பின்றையே நோக்கினா ரென்றற்குச், "செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கு மீயப்படும்” என்றருளிச் செய்தமையே சான்றாகும். இவர் பருவத்தால் முதிர்ந்தோர், இவர் அதனாற்றாழ்ந்தோர் என்றெண்ணி அவ்வவரிடத்துள்ள அருமைகளைப் பெறாதுவிடுதல் குற்ற மென்றும், எப்பொருள் எவ்வகைத் தோற்றமுடைத்தாயினும் அதன் தோற்றத்தைக் கண்டு மருண்டொழியாது அதன் உண்மைத் தன்மையினை அறிதல் வேண்டுமென்றும் வற்புறுத்து வந்தார். இவரறி வுறுத்திய உண்மைகளால்,

ஆரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/224&oldid=1579849" இலிருந்து மீள்விக்கப்பட்டது