உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் 10

தாங் கூறுவனவற்றை ஆராயாமலே யாரும் உடன்பட்டுத் தழுவிக் காள்ளல் வேண்டுமென்ற போலி யுரைப்பொரு ள் ஞாயிற்றின்முன் மறைந்த பனிபோல் ஒழிந்தது. உயர்ந்தோர் தாழ்ந்தோர் எவர்க்கும் மெய்ப்பொருளுணர்ச்சி வலியும், அது பெறுதற்காம் வேட்கையும் பெருகின. எல்லாரும் ஒருவரொடு ஒருவர் ஏற்றத் தாழ்வு கருதாது உழுவலுரிமை யன் யன்பு பாராட்டுவாராயினர். திருவுடையோர் பொருளைச் செவ்விய வழியில் செலவிட்டு அறத்திறங்களை விரித்துப் பெருக்கினர். ஆசிரியர் இங்ஙனம் பெருகி விரிந்த அருளற விசும்பினிடையே செஞ்ஞாயிறுபோற் கட்டிளமைப் பருவச் சிறப்போடுந் திகழ்ந்தனர்.

ஃதிங்ஙனம் நிற்பக், காவிரிப்பாக்கம் என்னும் ஊருக்குத் தலைவராய் ஆயிரம் ஏர்வைத்து உழவுத் தொழில் நடாத்தும் வழித்துணைவர் அல்லது மார்க்க சகாயர் என்னும் வேளாளச் செல்வர், தம்முடைய விளைபுலங்கள் வித்திடப் பட்டுப் பயிர் கிளைக்குங் காலத்து யாருமறியாவாறு கருகி யழிந்து முழுவதூஉம் பாழாய் விடுவது கண்டு மிக வருந்திப், “பல்லாயிரம் ஏழை மக்கள் பசிப்பிணியான் வருந்த இவை யிங்ஙனம் அழிகின்றனவே; என்செய்வோம்? இக்குறையினை நீக்கும் பெரியார் எவராயினும் அவர்க்கு என் அருமை மகளை வாழ்க்கைப்படுத்துவேன்” என்றெண்ணி, ‘இது நீக்குவார் யார்?’ என்று பலரையும் உசாவுவர்.பிற்றை ஞான்று நம் ஆசிரியர் பெரும் புகழ் இவர் தமக்கு நண்ணவே, இவர் ஆசிரியர்பால் மிக வொடுங்கிப் பணிந்து, “எம்மை வாழ்விக்குஞ் செல்வமே! ஏழை மக்கள் பலர் பிழைத்தற்கு இடனாயுள்ள அடியேனது விளைபுலம் பயிர் இலை விரியுங் காலத்துக் கருகிப் பாழாய்விடுகின்றது; பலர் அதனான் மிக வறியராய்ப் பசிப்பிணியாற் சொல்லுதற் கரிய துயர் உழக்கின்றனர்; அடிகளது அருட் கடைக்கண் நோக்கம் அதன்மேற் படுமாயின் அக்குறை தீர்ந்து அது பலர்க்கும் பயனுடைத்தாம்” என்று தெரிவித்துக் கொண்டனர். அதனைத் திருவுளத்தமைத்த ஆசிரியர் அச்செல்வரின் வேளாண்மை யுள்ளப் பெற்றி யுணர்ந்து, அவண் விளை புலத்தாற் பயனெய்தும் ஏழை மக்கட்கு மிக இரங்கித் தாமே அவ்வூர் சென்று அவ்விளை புலத்தை இறைவன் அருள் வடிவாய்க் கண்டு, வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்” என்ற திருக்குறட்பாவை மொழிந்தனர்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/225&oldid=1579850" இலிருந்து மீள்விக்கப்பட்டது