உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

201

ஆசிரியர் கடைக் கண் நோக்கம் பட்ட அக்கணந்தொட்டு அவ்விளை புலம் கொழுமையுற்று இடையூறேதுமின்றிப் பெருவிளைச்சல் பயப்பதாயிற்று. அதனால் பலவுயிர்கள் பசிப்பிணி நீங்கி மகிழ்ந்தன. அன்பே தமக்குரிய வுருவாய்த் தூய்மை பெரிதுடைய பெரியோரைச் சாரும் எப்பொருளும் தூய்தாகிச் செழிக்கின்றனவென்பது கட்புலனெதிரே கண்டு துணியப்பட்ட ஓர் உண்மையாம். பெரியோரது தூய குணப் பாற்கடலிற் சென்ற நீரெல்லாம் பாலாய் மாறுகின்றன. தீயோரும் நல்லோர் கூட்டுறவாற் றங்குணம் மாறிவிடுகின்றனர். விலங்கினங் களும் அமைதிக்குண மிக்குள்ள பெரியார் மாட்டு ஒடுங்கி நிற்கின்றன. ஞாயிற்றின் எதிரிலே புற்பூண்டுகள் வளர்கின்றன. ஆகையால், அன்பிற்கு ஒரு நிலையமாய் விளங்கிய ஆசிரியர் அருட்கடைக்கண் நோக்கப் பேற்றிற்கு உரியவான எல்லா வுயிர்களும் தூயவாமாகலின், அவர், நோக்கமாத்திரையானே அவ்விளைபுலம் முன்னுள்ள குறை நீங்கிக் தாயிற்றெனல் வியப்பன்று.

6

கொழுவி

ஆசிரியரது அருமையினைக் கண்ட அவ்வேளாளச் செல்வர், ‘இக்குறை நீக்குவார்க்குத் தன் மகளை வாழ்க்கைப் படுத்துவேன்' என்ற தம் குறிக்கோளை ஆசிரியர்க்கு மிக அஞ்சி வெளிப்படுத்த, அவரும் அதற்கு ஒருவகையால் இணங்கி, “நும் மகள் யாந்தரும் இவ்விருப்புக் கடலையினைச் செவ்வையாக அவைத்துத் தருகுவளாயின் அதற்கு இணங்குவேம்" என்றனர். அவரும் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய் நாயனார் குறிப்பறிவித்துக் கொடுப்ப, அந்நங்கையார் அத்துணைப் பெரிய அறிவாளரே இதனை அவைத்தலாகு மென்றெண்ணி விடுத்தன ராகலின், அப்படியே யாகுமென்று தாமுங் கருதிப் பிறிதுரையாது வாங்கி மணமுறச்சமைத்துப் படைத்தார். அதுகண்ட நம் ஆசிரியர் அம்மகளாரை மணம் புரிந்தருளினார். அறிவுடைமை யிற், சிறந்த தன் கொழுநன் கற்பித்தவாறே வழுவாது ஒழுகுதல் மனைவிமாட்டுப் பேரன்பு உள்வழியே நிகழற்பாலதாம். தன் கொழுநனிடத்து நம்பிக்கையில்லாவிடத்தும், அறிவுடைமையிற் றனக்கு நன்கு மதிப்பில்லாவிடத்தும், அவன் சொல்வனவற்றை மனைவி மறுத்துரையாடுவள். அவநம்பிக்கை, நன்கு மதிப்பின்மை முதலிய செயல்கள் மனைவிமாட்டு உண்மைப் பேரன்பு இல்வழியே உண்டாகற்பாலனவாம்.

அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/226&oldid=1579851" இலிருந்து மீள்விக்கப்பட்டது