உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

3

மறைமலையம் 10

அஃதுள்வழி அவை உளவாகா. நாயனார் உள்ளக் குறிப் புணர்ந்த நங்கையார், தாம் அவர் பாற் பேரன்புடையாளாதல் தெற்றெனப் புலப்பட அவர் வேண்டியவாறே விரும்பிச் செய்தனர்; இருப்புக் கடலை அவைக்கப் படாமை நன் குணர்ந்தன ராயினும், நாயனார் அஃதாம் எனக்கருதலின் தாமும் அவ்வாறே ஐயுறுதலின்றித் துணிவுள்ள முடைய ராயினார்; உண்மையாக நம்புதலினால் அவைக்கப்படாத இருப்புக் கடலையும் அவைக்கப் படுவதாயிற்று. “கடுகளவு நம்பிக்கை உளதாயின் மலையைப் பார்த்து நகர்க எனினும், அது நகரும்” என்று பிறரும் மொழிந்தா ராகலின், உண்மை நம்பிக்கை யான் முடியாத தொன்றில்லை. நம்பிக்கை உண்மையினாலே தான் அரிய பெரிய உலக வொழுக்கங்களெல்லாம் நடை பறுகின்றன. உவில்லியம் ஜேம்ஸ் என்னும் உளநூல் ஆசிரியரும் நம்பிக்கையான் நிகழும் அருந்தொழிற்றுறை களை நன்கு விளக்கிக் காட்டினார். பொன்னைப் பொன்னென்றே கருதுதலும் இரும்பை யிரும்பென்றே கருதுதலும் நம்பிக்கையே யன்றிப் பிறிதில்லை. அந்நம்பிக்கையுட் சிறிதேனும் ஐயம் நிகழுமாயின் அவ்வுணர்ச்சி ஒருவாற்றானுந் தோன்றாது. இரும்பினாற் சய்த கடலையை அங்ஙனம் உணராது உண்ணுதற்கு இசைவான கடலையென்றே உண்மையான் நம்பியவிடத்து அஃது அங்ஙனமே யாதல் ஒருதலையாமென்க. ருசார் பறவையினங்கள் இரும்பை உணவாக விழுங்க வில்லையா? பிறிதொரு சாரன கல்லைக் கறித்து உண்ண வில்லையா? கல்லும் இரும்பும் உண்ணுதற்கு ஆகாவென அவை நினைப்பின் அவற்றை யுண்ணுமோ? அவைதம் இயற்கையால் அவற்றை உண்டற்குரியவென வெண்ணியுண்டு உயிர்வாழ்தல் கண்கூடாய் அறியப்படுதல்போல, இருப்புக்கடலையினை நாயனார் அட்டுத் தருகவெனக் கொடுத்தாரென்பதும், அவை தம்மை அந்நங்கையார் அங்ஙனமே வேவுவித்துப் படைத்தா ரென்பதும், உண்மையன்பான் நிகழ்ந்த அருஞ்செயல்களாதலின் அவை பொருத்தமாவனவேயா மென்பது துணியப்படும். இனி, நாயனார் அம்மாதரை ஆராய்தற் பொருட்டு அவ்வாறு செய்தாரல்லது அவ்விருப்புக் கடலையினை அவைத்தலாகும் என்றெண்ணினாரல்லரெனில்:- ஒருவாற்றானும் அவைத்தற்கு ஏலாத அவற்றைக் கொண்டு அங்ஙனம் ஆராய நினைந்தன ராயின் அது நடுவண்மையாய நாயனார்தஞ் செவ்விய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/227&oldid=1579852" இலிருந்து மீள்விக்கப்பட்டது