உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

203

வுள்ளத்திற்குக் குற்றமா மாதலானும், அவர் நினைந்தவாறே அம்மாதருந் தம்மைத் தாம் அவைத்துத் தருதற்கு இணங்காராத லானும், இருவர்க்கும் உள்ளத்தின்கண் நம்பிக்கை யின்றென்பது பட்டு, அஃதெல்லாம் வெறுஞ் சொன்மாத்திரையேயாய் விடுமாதலானும், அது பொருந்தாதென மறுக்க. அது நிற்க.

இனி, நாயனார் தமக்கு மிக இசைந்த அந்நங்கை யாரோடும் ஒருப்பட்டு இல்லறம் நடாத்துவா ராயினர். தம் இல்லற வொழுக்கம் விருந்தோம்பன் முதலான செயல்க ளோடு னிது நடைபெறற் பொருட்டு இன்றியமையாது வேண்டப்படும் பொருளுக்கு ஏற்ப நூல் வாங்கிச் சீரை நெய்து விற்று முன்போலவே சுருங்கிய செலவின்கண் வாழ்க்கையை நிகழ்த்துவர். ஒழிந்த காலங்களினெல்லாம் தம்மிடத்து அறங்கேட்க வருவார்க்கு அவ்வறத் துறைகளை விரித்துத் தெருட்டுவர்.

இங்ஙனம் இல்வாழ்க்கை செலுத்துகின்ற நாளிலே, இவர் விளக்கும் அறப்பயனுட்பங்களை அறியமாட்டாத ஒருவர் இவர்பாற் றனித்துச்சென்று, “அடிகளே! இல்லறமோ மற்றுத் துறவறமோ எது சிறந்தது?” என்று வினாவ, அவர்க்கு அதனை அறிவிக்க அவரைத் தம் அகத்தேயிருத்தி, ஒரு நாட்டம்மனை வியார் தமக்கு விடியற் காலையிலே பழஞ்சோறு பரிமாறிப் போய் கிணற்றில் நீர் முகந்துகொண்டிருக்கப், “பெண்ணே! அமுது மிகச் சுடுகின்றது; விசிறி கொண்டுவந்து வெம்மை யாற்றுக” எனக் கூவ, அவ்வம்மையும் சடுதியிலே தாமெடுத்த நீர்க்குடத்தைக் கயிற்றோடும் விட்டு ஓடிவந்து விசிறிகொண்டு வீச, அப்பழஞ் சோற்றில் ஆவி குமுகுமுவென்று எழுந்தது; பின் கிணற்றிற்சென்று பார்க்கக் கிணற்றிற் பாதியளவு மெழுந்து நிறுத்தப்பட்ட நீர்க்குடமுங் கயிறுங் கீழ்விழாது அவ்விட் விடத்தே இடைவெளியில் நின்றன; இப்புதுமையினை அங்கு இருந்த அம்மாணவர் கண்டு வியந்தனர்.

பின்னும் ஒருநாட் பகலில் ஆசிரியர் ஆடை நெய்து கொண் டிருக்கையில், தங்கையிலிருந்த குழல் என்னும் நெய்தற்கருவி கீழ்விழுந்ததாக, அதனை எடுத்தற்கு விளக்கெடுத்துவா பெண்ணே என்றழைப்ப, அவ்வம்மையாரும் பகலென்று நினையாமற் கணவன் சொல்வழியே நினைவுடையராய் விளக்கம் எடுத்து வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/228&oldid=1579853" இலிருந்து மீள்விக்கப்பட்டது