உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் 10

இன்னும் இவ்வாறு தங்கொழுநன் கட்டளை திறம்பாது அம்மையார் ஒழுகுஞ் சீர்பாட்டினைக்கண்டு அங்கிருந்த மாணவர், “அன்பிற்சிறந்த கற்புடை மனையாள் வாய்க்கு மாயின் இல்லறமே சிறந்தது; அங்ஙனம் வாயாவிடி ன் துறவறமே நன்று” என்று தெளிந்து ஆசிரியர்பால் விடை பெற்று ஏகினார். பின் ஒருநாள் இவர்தந் திருக்குறளுரை யினைக்கேட்ட சிறான் ஒருவன் இவரது பொறையுடைமையை ஆராய வேண்டி, இவர்தாம் நெய்த ஆடையை விற்குமிடத்தே வந்து, அதனை அவர் கையினின்றும் வாங்கி, ‘இதன் விலை என்ன?' என்று வினாவினான்; வினாவலும் ‘அஃது ஒருபணம் என்றார். பின் அதனை இரண்டு கூறாகக் கிழித்து, 'இப்பாதித் துண்டின் விலை யாது?' என்றான்; அதற்கவர், ‘அரைப்பணம்' என்றார்; பின்னும் அப்பாதியினை இரண்டு பங்காகக் கிழித்து, இத்துண்டின் விலை யாது?' என்றான்; அவர், “காற்பணம்’ என்றார். இவ்வாறு சிறிதும் வெகுளாது மிகப் பொறுமை யோடும் விடை கூறிய நாயனார் அருமையினை அயின்று மிக வியந்து போயினான்.

66

வழிநாளினும் அவர் பெருமையினை ஆயவேண்டி அவர் இல்லத்தே சென்று, அவர் மனையாளை வம்புக்கு இழுத்தனன். அதனைக் காண்டலும் நாயனார் அவனைத் தூணிற்பிடித்துக் கட்டிப் பிரப்பங் கோலாற் புடைத்தனர். அதற்கு அச்சிறுவன், ‘ஐயரே! ‘அகழ்வாரைத் தாங்கு நிலம் போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்தறலை’ என்று நீர் கூறிய குறட்பாட்டு நும்மளவிற் பயனின்று போலும்!" என இழித்து உரைப்ப, அதற்கவர், “நீ அந்நூன் முழுவதும் உணர்ந்திலை; 'செய்தக்கவல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங்கெடும்' என்ற குறளை நன்கறிவாயாக” என்றனர்.உடனே அச்சிறுவன் மனந்திருந்தித் தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டிப் போயினான்.

ம்

இங்ஙனம் ஆசிரியர் இல்லறத்தின் கண்ணராய் நின்று ஒழுகுகின்ற நாளிலே, இவரது ஒழுக்க விழுப்பத்தினைக் கண்டு திருந்தினார் பலர். ஒருநாள் ஆசிரியர் நூல் வாங்கும் பொருட்டு ஏலேலசிங்கர் என்னும் வேளாளச்செட்டியாரிடஞ்சென்ற போது, வீட்டிலுள்ளார் அவர் இறைவனைத் தொழுது கொண்டிருக்கின்றார் என்றனர். அதற்கு இவர், 'இல்லை! இல்லை! அவர் வரவுசெலவுக் கணக்குப் பார்க்கின்றார்’ என,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/229&oldid=1579854" இலிருந்து மீள்விக்கப்பட்டது