உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

205

அதனைக் கேட்டோர் செட்டியாரிடஞ் சென்று நிகழ்ந்தது தெரிவிப்பச், செட்டியார் நாயனார் தமதுள்ளம் ஒருமைப் பாடமையினைக்கண்டு கூறியதற்கு வியந்து அஞ்சி, 'அடிகாள்! அடியேனது அறிவின்மையைக் களைந்து தந்திருவடித் தொழும்பிற்கு நாயேனை ஆளாக்கிக் கொள்ளுதல் வேண்டும்” என இரப்ப, நாயனார், ‘என்னுடன் வருக' என்றழைத்துப் போய், ஒரு மரத்தின்மேல் அவரை ஏற்றுவித்துக், 'கிளையைப் பற்றிக் கொண்டு தொங்குக' என்றார். செட்டியார் அவ்வாறே செய்தபின், ரண்டு கைகளையும் விட்டு விடுக' என்றார்; ஆசிரியர் கட்டளை வயத்தராய்ச் செட்டியார் அப்படியே சிறிதும் அஞ்சாது விட்டுவிட, அவர் கீழே விழாது சிறிதும் வருத்தமின்றி வெளியில் நின்றனர். அது முதற்கொண்டு ஏலேலசிங்கர் ஆசிரியரிடத்து உண்மையன்பு பாராட்டுவாராய், அவர் குறிப்பின்வழி யொழுகி அவர் அடிநீழல் பிரியாது வைகினார்.

ஏலேலசிங்கர் வாணிக வாழ்க்கையை ஆசிரியர் கட்டளைப் படியே முன்போல் நடாத்தி வந்தனராயினும், தங்கருத்தெல்லாம் முதல்வன் அருட் பெருக்கிற் றோய்ந்து விளங்கினார். அவரது வாணிகமும் முன்னிலும் பன்மடங்கு மிகுதியாய் நடை பெறலாயிற்று. ஓர்யாண்டு எங்கும் மழையின்றி நிலம் வறண்டு அஃகம் சுருங்கிப்போக, ஆசிரியர் ஏலேலசிங்கரை நோக்கித், "தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” என்றுரைத்து, 'நுங் களஞ்சியத்துள்ள நென்மணிகளை யெல்லாந் திறந்து வழங்குக' என்று கட்டளை யிட்டனர். அவரும் அவ்வாறே செய்து வற்கடம் போக்கினா ரென்ப. இன்னுமிதனைப் பிறவாறுந் திரித்துக் கூறுவாருமுளர். அவையெல்லாம் பொருந்தாமை காண்க.

இனித் தம் அன்பிற்கினிய இல்லக்கிழத்தியார் உயிர் துறந்த ஞான்று அவரது பிரிவான் ஆசிரியர் மிக உருகியாற்றாது,

66

'அடிசிற் கினியாளே யன்புடை யாளே

படிசொற் கடவாத பாவாய்! - அடிவருடிப்

பின்றூங்கி முன்னெழுஉம் பேதையே போதியோ

என்றூங்கு மென்க ணிரா.

وو

என்றோர் அருமைத் திருப்பாட்டை அருளிச் செய்தன ரென்ப. இதனான் ஆசிரியரது அன்புடைமை நன்கு விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/230&oldid=1579855" இலிருந்து மீள்விக்கப்பட்டது