உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் 10

ஆசிரியர் தம் இல்லாளைப் பிரிந்தபின், தாம் இளம்

பருவத்துத் தொடங்கிய துறவொழுக்கத்தினை நன்கினிது மேற்கொண்டார். இல்லறவொழுக்கத்தின்கண் அறிவுடைய ராய்த் துறவுபூணுதற்குத் தகுதி வாய்ந்தோராய் வந்தோர்க் கெல்லாம் அவ்வறச் சிறப்பை விரித்து விளக்குவான் புகுந் தனர். அஞ்ஞான்று இவர் அருமைத் தமக்கையரான ஔவையார், தம்பியரான கபிலர் முதலாயினரும் இவருடன் வந்திருந்து அளவளாவி இவர் அருளிச்செய்த திருக்குறளை மிகப் பாராட்டினர். திருமயிலாப்பூர் என்கிற திருநகர் தேவரமிழ்தம் பிறந்த திருப்பாற்கடலெனப் பொலிவுற்றது; அவ்வமிழ்தத்தை உட்கொள்ள மொய்த்த தேவரினங்களைப் போன்றனர் பல நாடுகளிலிருந்து அறப்பொருள் கேட்க வந்தோர்; அவ்வமிழ்தம் பருகவொட்டா தெழுந்த நஞ்சம் போன்றது அங்குத்தொக்க மாந்தர்தம் அறியாமை; அந்நஞ்சத்தினைத் தான் விழுங்கித் தேவர்க்கு அமிழ்தம் பகுத்தருளிய இறைவன் போன்றனர் அவரறியாமையினை நீக்கித் திருக்குறளுரை செய்தருளிய

ஆசிரியர் திருவள்ளுவனார்.

66

இங்ஙனம் ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் உலகனைத்தையும் நல்லறவொழுக்கத்திற் படுத்துத் தம்முடைய திருமேனியினை முதல்வன் அருள்வெள்ளத் தழுத்தி அதனை அவ்வண்ணமாக்கித் தாம் இறைவன் றிருவடியோடு ஒன்றி ஒன்றறக் கலந்திட்டார். ஏலேலசிங்கர் முதலாயினோர் ஆசிரியர் பிரிவிற் காற்றாது மிகவருந்தி ஆசிரியருரைத்தருளிய, நெருந லுளனொருவன் இன்றில்லையென்னும், பெருமை யுடைத் திவ்வுலகு” என்னும் அருமையுரையைக் கடைப்பிடித்து ஆறுதலுறுவாராயினர். இவர் தம் முதன் மாணாக்கரான ஏலேலசிங்கரால் ஆசிரியரது படிவம் செய்விக்கப்பட்டு நிறுத்தப் பட்டதென்றும், அத்திருவுருவமே இப்போது திருமயிலாப்பூரில் எல்லாரானும் வணங்கப்படுகின்றதென்றும் அறிவுடையோர் கூறுகின்றனர்.

1.

2.

3.

அடிக்குறிப்புகள்

"கருவூர்ப்பெரும்பதிக்கட் பெரும்புலைச்சி' என்பதும் பாடம்.

'பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்' என்பதும் பாடம்.

Prof. W. James' The will of believe.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/231&oldid=1579856" இலிருந்து மீள்விக்கப்பட்டது