உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

6. ஆசிரியர் காலம்

னி, ஆசிரியர் திருவள்ளுவநாயனார் இருந்த காலம், அவர் அருளிச்செய்த திருக்குறணூற் செய்யுட்கள் ஒரோ வொன்று பின்னை நூலாசிரியரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுவதொருமுறை கடைப்பிடித்து இனிது நிறுவப் படும். பண்டைச் செந்தமிழ் நூலாசிரியரிற் சிலப்பதிகாரம் என்னும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளியற்றிய

இளங்கோவடிகளும், அவரோடு ஒருகாலத்தினரும் மணி மேகலைத் தொடர்நிலைச் செய்யுளாசிரியருமான மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனாரும் திருக்குறட்பாக்களைத் தம் நூலகத்தே மேற்கோளா யெடுத்துரைத்தனர். அவருள் இளங்கோவடிகள் வஞ்சினமாலையிற்,

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்"

என்னுந் திருக்குறட்பாவை,

“முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்"

எனவும், கட்டுரை காதை யிறுதியில்,

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

(குறள் 319)

பெய்யெனப் பெய்யு மழை

என்னுந் திருக்குறளைத்

وو

(குறள் 55)

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வந் தொழுந்தகைமை திண்ணமால்'

எனவும் எடுத்துக் காட்டினர். அதுவேயுமின்றி, ஆசிரியரின் தமக்கையார் ஒளவையாரால் அருளிச் செய்யப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/232&oldid=1579857" இலிருந்து மீள்விக்கப்பட்டது