உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 10

66

'அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்' என்னும் மூதுரைத் திருப்பாட்டை வழக்குரைகாதை யிறுதியில்,

“அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே”

என்னுங்

எனவும், “பேதமை என்பது மாதர்க்கணிகலம் கொன்றைவேந்தன் நூற்றிருப்பாவை வஞ்சின மாலையில்,

“பெண்ணறி வென்பது பேதைமைத்தே யென்றுரைத்த நுண்ணறிவினோர் நோக்க நோக்காதே”

எனவும் எடுத்தாண்டனர், இனிச் சீத்தலைச் சாத்தனாரும்,

1“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”

என்று திருக்குறளை யெடுத்தாண்டு ஆசிரியர் மாட்சியினை வலியுறுத்திக் கூறினார். வை தம்மால் இளங்கோவடி கட்கும் சாத்தனாருக்கும் முற்பட்டவர் திருவள்ளுவராதல் தெற்றெனத் துணியப்படும்.

இனி, இளங்கோவடிகள் காலம் னைத்தென்பது காட்டுதும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன், சோழன் மணக்கிள்ளி மகளை மணந்து செங்குட்டுவன், இளங்கோ வென்னும் புதல்வர் இருவரைப் பயந்தனன். இஃது இளங்கோவடிகள் தாமே கூறிய,

66

குமரியொடு வடவிமயத்து ஒரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத், திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர்செங் களம் வேட்டுக் கங்கைப்பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்” என்னும் உரைப்பாட்டு மடையானும், பரணர் பாடிய,

66

"வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக்

குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்

99

என்னும் பதிற்றுப் பத்தானும் இனிது பெறப்படும். இஃதிங் ஙனமாகவும், இவ்வுண்மை யுணராத கனகசபைப் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/233&oldid=1579858" இலிருந்து மீள்விக்கப்பட்டது