உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

209

என்பார் தாம் எழுதிய பதினெண் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழர் என்னும் புத்தகத்திலே, நெடுஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தான் மகள் சோணை யென்பாளை L மணந்தான் எனத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அடியார்க்கு நல்லாருஞ் சிலப்பதிகார வுரையிலே 2வாளாது சோழன் மகள் சோணை என்றதேயன்றிக் கரிகாற் பெருவளத்தான் மகள் என்று யாண்டுங் கூறிற்றிலர். உண்மைப் பொருள் பயின்று வரும் வரலாற்றுரை மேற்கோளின்றித் தமக்குத் தோன்றியவாறே கரிகாற் பெரு வளத்தான் மகள் என்று பிழைத்துணர்ந்து கூறியது சிறிதும் பொருந்தாது. இனி, நெடுஞ்சேரலாதன் மக்கள் இருவருட் செங்குட்டுவன் என்னுந் தந் தமையன் பொருட்டு ளமைப் பருவத்தே தறவு பூண்டா

ளங்கோவடிகள்

ரென்பது.

3‘குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த

குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு’

என்பதனாலும், அதற்கு அடியார்க்கு நல்லாருரைத்த உரைப் பகுதியானும் இனிது தெளியப்படும்.

கண்ணகி, கணவனையிழந்து துறக்கநாடுபுக்க பிற்றை ஞான்று செங்குட்டுவன் அவள் தெய்வக்கற்பினை மிக வியந்து அவளை வழிபடு தெய்வமா நிறுத்தற் பொருட்டு இமயஞ் சென்று கற்கொணர்ந்து அதன்கண் அவளை நிறுத்தி நட்டுக் கோட்டஞ்சமைத்து விழாக்கொண்டாடிய விடத்து இலங்கைக் கரசனான கயவாகு வென்பவன் போந்து செங்குட்டுவனுட னிருந்து வழிபட்டான்; இது,

4“உலக மன்னவன் நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமைய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியுள் வந்தீ கென்றே வணங்கினர் வேண்ட'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/234&oldid=1579859" இலிருந்து மீள்விக்கப்பட்டது