உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

  • மறைமலையம்

10

என்று ஆங்குடனிருந்த இளங்கோவடிகள் கூறுமாற்றான் அறியப்படும். இங்கே மொழிந்திடப்பட்ட கயவாகு என்னும் வேந்தன் சிங்கள சரித்திர நூல்களான மகாவஞ்சம், தீப வஞ்சம் ம் என்பவற்றான் அறியப்பட்ட முதற் கயவாகு வேந்தனே யாவன். இவ்வரசன் கி.பி. 113-வது ஆண்டு முதல் 125- வது ஆண்டு வரையிற் செங்கோல் ஓச்சினானென்று அந்நூல் களால் அறிகின்றோம். இரண்டாங் கயவாகு என்னும் வேந்த னாருவனும் உளன் என்பது அந்நூல்களால் அறியப்படினும், அவன் காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டென்று அவற்றிற் றெளிவுபெறச் சொல்லப்படுதலால், அவனைப் பற்றி ஈண்டு ஆராய்ச்சி இல்லையென்க.

6

னிச், சேரமான் செங்குட்டுவனும் கயவாகுவும் ஒரு காலத்தினரென்பது பெறப்பட்டமையால், இச்சேரமான் கயவாகுவின் காலத்திடைவரையும் இருந்தான் என்று கோடல் இழுக்காது. இச்செங்குட்டுவன் ஐம்பத்தைந்தாண்டு அரசு வீற்றிருந்தானென்பது பதிற்றுப்பத்துரையால் விளங்குதலின், கயவாகுவின் காலத்திடையான கி.பி. 119-வது ஆண்டினின்றும் 55 ஆண்டுகள் கழிப்பவே இச்சேரன் கி.பி. 64- ஆம் ஆண்டில் அரியணை ஏறினானென்பது பெறப்படும். இவன் றந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட் டியாண்டு அரசு செலுத்தினானென்பது அப் பதிற்றுப்பத்துரை யானே நன்கு விளங்குதலின், இவன் கி.பி. 6-ஆம் ஆண்டில் அரியணை யேறினானாதல் யார்க்கும் பொள்ளெனப் புலப்படா நிற்கும். இவற்கு முற்பட்ட சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை பதினேழி யாண்டு செங்கோலோச்சினா னென்பது பதிற்றுப்பத்துரையிற் சொல்லப்படுதலின், இவன் கிறித்து பிறப்பதற்கு முன் 11-ஆம் ஆண்டில் அரியணை ஏறினானென்பது கொள்ளப்படும். இவன் °றந்தை சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தைந்தாண்டு அரசு புரிந்தான் என்பதுரைக்கப்பட்டமையின், இவன் கி.முன் 36-ஆம் ஆண்டு அரசுகட்டில் ஏறினானென்ப துணரற்பாற்று. இவற்கு முற்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு போரியற்றிப் புறப்புண் வடக்கிருந்தான். இவன் அங்ஙனம் இருந்தவழிச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் அரியணை வைகியிருந்து செங்கோல் செலீஇயினானென்பது உணரப்படும். ஆகவே,

நாணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/235&oldid=1579860" இலிருந்து மீள்விக்கப்பட்டது