உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திருக்குறள் ஆராய்ச்சி

211

இவன் காலத்தினான சோழன் கரிகாற் பெருவளத்தான் கி.முன். முதல் நூற்றாண்டின் இடையிலே அரசியற்றப் புகுந்தானா கற்பாலன். கரிகாற் பெருவளத்தானுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் இை டை யே ஒரு நூற்றாண்டு கழிந்தமை இவற்றால் நன்கு தெளியப்படுமாகலின், இச்சோழன் ஏனைச் செங்குட்டுவன் காலத்திருந்தான் எனக் கூறினாரது உரை ஒரு சிறிதும் பொருந்துமாறில்லை யென்க. இன்னும் இவ்வுண்மை ளங்கோவடிகள் கூறுமுகத்தானும்

யினை காட்டுவாம். இவர்,

10’”செருவெங் காதலிற் றிருமா வளவன் வாளுங் குடையு மயிர்க்கண் முரசும்

நாளொடும் பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்.

எனவும்,

وو

11“மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன் றன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பிற்சென்று கன்னவி றோளாயோ வென்னக் கடல் வந்து

முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்”

விளக்கிக்

எனவுங் கூறுமாற்றால் அவ்வரசன் தமக்கு முன்னேயி ருந்தவன் என்பதை நன்கு அறிவுறுத்திட்டார். சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சி நடைபெறுகின்றுழிக் கரிகாற் சோழன் இருந்திலன் என்பதற்குப் புகார்க் காண்ட முடிவிற் றொகுத்துக் கூறும் பதிகத்தில் அவ்வரசன் பெயர் ஏதும் அவர் எடுத்துக் கூறாமையே சான்றாகும். மற்று, மதுரைக் காண்டத்திறுதியினும் வஞ்சிக் காண்டத் திறுதியினுங் கூறிய ஏனையிருபதிகங்களினும் முறையே பாண்டியன் நெடுஞ்செழியனையும், சேரமான்

செங்குட்டுவனையும் அவர் கிளந்தெடுத்துரைத்ததூஉங் காண்க. அற்றேல், அடியார்க்கு நல்லார்,

66

'ஏழாண் டியற்றி யோர் ஈராறாண்டிற் சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/236&oldid=1579861" இலிருந்து மீள்விக்கப்பட்டது