உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் 10

என்ற அரங்கேற்றுகாதை அடியுரையிற் அடியுரையிற் 'கரிகாற்பெரு வளத்தாற்கு அவன் அவையரங்கேறிக் காட்டலை விரும்பி எனக்கூறிய தென்னையெனின்;- அவர் நூன்முழுவதூஉம் முன்னொடுபின் மலைவின்றிப் பார்த்து வரலாற்று முறையறிந்து காணாது எழுதினா ராகலின் அவருரை கொள்ளற் பாற்றன்றென விடுக்க மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் விழா வறைகாதையில்,

66

“மன்னன் கரிகால்வளவ னீங்கிய நாள்

இந்நகர் போல்வதோர் இயல்பினதாகி”

என்றதூஉம், செங்குட்டுவன் காலத்தே புகார் நகரிற் செங்கோல் செலுத்தின வேந்தன் சோழன் நெடு முடிக்கிள்ளியும் அவன் புதல்வன் உதயகுமரனுமே யாவரென்பதூஉம், யாங்கூறியதே பொருளென்று வற்புறுத்தல் காண்க. இதனாற் சோழன் கரிகாற் பெருவளத்தான் நெடுமுடிக்கிள்ளிக்கும் முன்னிருந் தோனாதல் ஒருதலை என்க.

இனி, க் கரிகாற் பெருவளத்தானுக்குத் தந்தையாவான் சோழன் உருவப்பஃறே ரிளஞ்சேட் சென்னி என்றறிதல் வேண்டும்12. அதனான், இவன் கி-முன் முதல் நூற்றாண்டின் றொடக்கமுதல் அதன் இடையளவும் இருந்தான் என்று உணர்க. இவ்வரசனைப் பெருங்குன்றூர்கிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாடினர்13. இன்னும் இப்பெருங்குன்றூர் கிழாராற் பாடப்பட்டோன் வையாவிக்கோப் பெரும் பேகன்.14 என்பவனாவன். இவ்வையாவிக்கோப் பெரும் பேகனையே கபிலரும் பாடியுள்ளார்15. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்மேற் கபிலர் ஏழாம் பத்துப்பாடிப் பரிசில் பெற்றாரென்பது பதிற்றுப்பத்தால் அறியப்படுதலின், கபிலரும், பெருங்குன்றூர் கிழாரும், செல்வக் கடுங்கோவாழியாதனும், உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னியும் சிறிதேறக்குறைய ஒரு காலத்தினரென்பது தெளியப்படும். மேலே, சேரன் செல்வக் தளியப்படும்.மேலே,சேரன் கடுங்கோ கி-முன் 36-ஆம் ஆண்டு அரசியற்றத் தொடங்கினா னென்பது காட்டப்பட்டமையின், இவரெல்லாம் கி-முன் முதல் நூற்றாண்டின் டையிலே இருந்தாரெனல் தேற்றமாய் நிலைபெறுதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/237&oldid=1579862" இலிருந்து மீள்விக்கப்பட்டது