உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திருக்குறள் ஆராய்ச்சி

-

213

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்குமுன் பெருஞ்சேர லிரும்பொறையும், அவற்குமுன் செல்வக்கடுங்கோவும் அரசியற் றினாரெனல் யாங்ஙனமெனிற், கூறுதும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்கும், செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக்கோமான் மகட்கொடுத்தானென்பது பதிற்றுப் பத்தில் ஆறாம்பத்தி னிறுதிப் பதிகத்தானும் எட்டாம் பத்தின் இறுதிப்பதிகத்தானும் இனிதறியக் கிடக்கின்றது. இதனால், வேளாவிக்கோமான் தான் பெற்ற பெண்மக்களுள் இருவரை அவர் தமக்கு முறையே வாழ்க்கைப் படுத்தினா னென்பதும், அவ்விரண்டு சேர மன்னருந் தமக்குள் உறவுரிமை யுடையரா மென்பதும் தெற்றென விளங்கும்.

நெடுஞ்சேரலாதன் றந்தை உதியஞ்சேர உதியஞ்சேரலெனவும் சல்வக்கடுங்கோவின் றந்தை அந்துவஞ்சேரலெனவும் பதிற்றுப்பத்தால் நன்கறிகின்றோம். இவ்வாறு அறியப் படுகின்றுழி உதியனும் அந்துவனும் உடன் பிறந்தாராக வேண்டு மென்பதும் உறுதிப்படுகின்றது. யாங்ஙனமெனில், இவர் புதல்வோர் இருவரும் வேளாவிக் கோமான் பெண்களை மணந்தனரென்றமை யானே இவர் இருவரும் அவ்வாறு ஒருவன் மக்களையே வதுவை கூடுதற்கு ஒரு காரணம் பெறப்படல் வேண்டுமென்றோ? இவ்விருவரும் உடன்பிறந்த இயைபுபற்றியே ஒருதாய் மக்களைத் தமக்கு மனைவியராக வேண்டின ரென்பது முடிக்கப்படும். இனி, இவர் தமக்கு வேறுவேறு தந்தையர் காணப் படுதலால், இவர் தந்தைமாரே உடன்பிறந்தாரெனவும் அவர் அங்ஙனமாகவே அவர் தம் புதல்வரான மற்றிருவரும் உடன் பிறந்தார் போல்வதோர் இயல்புடைய ராயினரெனவுங் கருதல் இழுக்காது. இனி, நெடுஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெரு வளத்தானோடு பொருது புறப்புண்நாணி வடக்கிருந்த வழி, அவனில்லா நேரத்தில் அவனுடன் பிறந்தோனான செல்வக் கடுங்கோ அரசியல் நடாத்தினான். செல்வக் கடுங்கோ இருபத் தைந்தாண்டு அரசியற்றித் துஞ்சியபின்னரும் நெடுஞ்சேரலாதன் வந்திலாமை பற்றியே அச்செல்வக் கடுங்கோ மகன் பெருஞ் சேரலிரும் பொறை அரசியற்றினானாகற்பாலன். பெருஞ் சேரலிரும்பொறை பதினேழியாண்டு முற்றியபின்னர்த் தன்பெருந் தந்தை சேரலாதன் மீண்டு வந்தமையால் அவற்கு அவ்வரசியலை ஈந்தனனென்றாதல் கோடலே பொருத்தமுடைத்தாம். ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/238&oldid=1579863" இலிருந்து மீள்விக்கப்பட்டது