உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் - 10

கி.பி. 6-ஆம் ஆண்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரியணையேறி வைகுமுன்,பெருஞ்சேரலிரும்பொறை அரசியற் றினானெனயாம் முன்னுரைத்தவுரை பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. அஃதங்ஙனம் பொருத்த முடைத்தாதல் காண்க. அஃதங்ஙனம் பொருத்தமுடைத்தாகவே அவன்றந்தை சேரன் செல்வக்கடுங்கோ கி.முன் 36-ம் ஆண்டு அரசியற்றப் புகுந்தானென்றதூஉம் வலியுறுத்தப்பட்ட தாயிற்றென்க.

இனிக் கி.முன் முதல் நூற்றாண்டின் இடையிலிருந்த செல்வக் கடுங்கோவின் புதல்வன் சேரமான் பெருஞ்சேர லி ரு ம்பொறை தகடூரில் அதியமான் அஞ்சியொடு பொருதானென எட்டாம்பத்தில்,

"தகடூர்எறிந்து நொச்சிதந் தெய்திய

அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேரலிரும் பொறை”

என்று சொல்லப்படுதலின், அதியமானஞ்சியும் அவனைப் பாடிய அவன் தமக்கையார் ஒளவையாரும் 16கடுங்கோவைப் பாடிய கபிலருமெல்லாம் ஒரு காலத்தினரென்பது பெறப்படுதல் காண்க.

இக்கபிலரும் ஒளவையாரும் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனையாதல், சேரன் செங்குட்டுவனை யாதல், சோழன் நெடுமுடிக் கிள்ளியையாதல் பாடிற் றின்மையின் இவர் கி.முன் முதல் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னே யிருந்திலரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போற் வெள்ளிதிற் புலப்படும். இருவருள்ளுங் கபிலர் கி.முன் 11-ஆம் ஆண்டு அரியணையேறிய பெருஞ்சேரலிரும்பொறையாற் பொரப்பட்ட அதியமான் அஞ்சியைப் பாடியதின்மையின், இவர் அவற்கு முன்னே துறக்கம்புக்கார் என்பதும், ஔவையார் அவனை மிகவியந்து பாடிய பாக்கள் பலவுண்மையின் இவர் அவற்குப் பின்னேயும் இருந்தார் என்பதும் அறியப்படுகின்றன. அதியமான் அஞ்சியினாற்றரப்பட்ட ஓர் அரிய நெல்லிப் பழத்தை யுண்டாராகலின், ஒளவையார் நோயின்றி வலிவேறிய வுடம்பினராய் அவன் மகன் பொகுட் டெழினியையும் பாடிக் கொண்டு கி-முன் முதல் நூற்றாண்டு இறுதிகாறும் இருந்தா வர் நீண்ட

ரனல் துணியப்படுகின்றது. ங்ஙனம் இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/239&oldid=1579864" இலிருந்து மீள்விக்கப்பட்டது