உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

215

வாழ்நாளுடையராயிருந்ததுபற்றியே இவர்க்கு ஒளவை என்னும் பெயர் வழங்கப்படுவதாயிற்று. இத்திறங்களெல்லாந் தொகுத்து நுணுகி ஆராய்கின்றுழி, இவர் கி-முன் முதல் நூற்றாண்டின் றொடக்கமுதல் அதன் இறுதி காறும் நூறியாண்டு உயிர் வாழ்ந்திருந்தன ரென்றுரைப்பது வழுவின்றிப் பொருத்த முடைத்தாதல் தெற்றென விளங்கற்பாலதேயாம். இது கிடக்க.

இனி, ஔவையாராற் பாடப்பட்ட கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியின் காலம் ஆசிரியரது காலத்தை நிறுவுதற்கு இன்றியமையாது வேண்டப்படுதலால் அதனையும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். இவ்வுக்கிரப்பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் நண்பரென்பது ஒளவையார் பாடிய, “நாகத்தன்ன பாகார் மண்டிலம்” என்னும் புறநானூற்றுச் செய்யுளாற் றெளியப்படுகின்றது. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறைக்கும் போர் நிகழ்ந்தவாறு "பருத்திப் பெண்டின்” என்னும் புறப்பாட்டினால் நன்கறியப்படு கின்றது. தகடூர் எறிந்த சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மூத்த புதல்வரென்ப தூஉம், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை அவர்க்கு இளைய புதல்வரென்பதூஉம் அவர் பெயரொற்றுமையானே நன்கு துணியப்படும். அவர் மூத்த பிள்ளையாதலாற் 'பெருஞ்சேரல்' எனவும், இவர் இளைய பிள்ளையாதலால் வாளாது 'சேரல்’ எனவும் மொழி யெடுத்துப் பெயர்பெறுவாராயினர். செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலர் இவர்க்குச் சிறந்த நண்ப ராயினும், இவர் முடிசூடிக் கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்னும் பட்டம் பெறுகின்ற காலையிலெல்லாம் அக்கபிலர் இறந்து பட்டாரென்பது பொருந்தில் இளங்கீரனார்,

17 “செறுத்த செய்யுட் செய்செந் நாவின்

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்

இன்றுள னாயின் நன்றுமன்.

وو

என்று அவரைச் சிறப்பித்து அவ்வரசன் கூற்றாகச் சொல்லிய வாற்றான் இனிதறியப்படுமென்க. இதனானே, தகடூரெறிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/240&oldid=1579865" இலிருந்து மீள்விக்கப்பட்டது