உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 10

பெருஞ்சேரல் சிங்காதனம் ஏறுமுன்னரே இவர் இறந்து பட்டாரென மேலே யாமுரைத்தவரை வலிபெறுதல் காண்க. இவ்வியானைக்கட்சேய் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாற் பிணிப் புண்டாரென்பது17- வது புறப்பாட்டினால் அறியப்படுதலின், உக்கிரப்பெருவழுதி தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனே என்றாதல், அல்லதவனின் வேறொன்றாதல் கொள்ளப்படும். மற்று வேறென்றே கொள்ளும்வழி உக்கிரப் பெருவழுதி அப் பாண்டியனுக்குப் பின்னே அரியணை வீற்றிருந்தா னென்று கோடலே பொருத்தமாம். சேரமான் செல்வக்கடுங்கோ கி.முன் 36ஆம் ஆண்டு அரசுபுரியத் தொடங்கினானென்று முன்னரே காட்டினேமாதலால், மகனைப் பிணித்த தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன், கி-முன் 30-ஆம் ஆண்டிலிருந்தனெனவும், இவற்குப் பின்னே 26-ஆம் ஆண்டில் உக்கிரப்பெருவழுதி அரியணை யேறினா னெனவுங் கோடல் குற்றமாகா தென்றறிக. பின் கி.முன் 20-ஆம் ஆண்டிலே உக்கிரப்பெழுவழுதி சங்கம் நிறுவிச் செந்தமிழ் மிக வளம்படுத்து வளங்கினான் என்றுணர்க.

வன்

ளைய

இங்ஙனங் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் வேந்தர்பெருமானாற் றமிழ் மிகப் பொலிவு பெறு கின்ற காலையில், திருமயிலாப்பூரில் வீற்றிருந்தருளி அற வுபதேசஞ் செய்யும் நம் ஆசிரியர் பேரறிவும் அவர் அறவுப தேசமாட்சியும் இவ்வேந்தன்பால் எய்துவவாயின. ஆசிரியர்க்கு அருமைச் சகோதரியாராம் ஒளவைப் பெருமாட்டியாரானும் ஆசிரியர் அருமை பெருமைகளை இவ்வரசன் நன்கறிந்து மகிழ்ந்தனன். அவர் அருளிச்செய்த தெய்வத் திருக்குறள் நூலை அவர்தாமே தந் திருவாய் மலர்ந்துரை விரித்துரைப்பக் கேட்டல் வேண்டும் என்னும் வேட்கை அரசற்கு மிகுதியும் பெருகுவ தாயிற்று. சங்கத்து வீற்றிருக்குங் கபிலர்க்கும் தன் மாட்டுவரும் ஔவையார்க்குந் தன் கருத்தினை அறிவிப்ப அவர் இருவரும் அவ்வாறே ஆசிரியரை மதுரைமாநகர்க்கு எழுந்தருளச் செய்விக்கும் பொருட்டுத் திருமயிலாப்பூரிற் போந்து அவர்பால் அளவளாவிப் பாண்டியன் கருத்தறிவித்து அவரை அதற்கு ஒருப் படுவித்து அவரைக் கூடன்மாநகர்க் கெழுந்தருளச் செய்வ வித்துத் தாமும் உடன் போயினர். பாண்டியனும் ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/241&oldid=1579866" இலிருந்து மீள்விக்கப்பட்டது