உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

217

வருகையினையறிந்து வரம்பறியா மகிழ்ச்சியெய்தி எல்லாச் சிறப்புக்களோடும் எதிர்சென் றழைத்துப்போய்ப் புலவர் அமர்ந்திருக்கும் பெரும் பீடிகையின் நடுவே அவரை வீற் றிருந்தருளச் செய்து வணங்கியிருந்தான். ஆசிரியர் அப் புலவர் குழாத்திடையே வான்மீன் நடுவில் நாண்மதியென்ன வயங்கினார். அப்பீடிகையில் உடனிருந்த புலவரெல்லாரும் இத்தெய்வ வருளாளரான ஆசிரியரோடு யாமெல்லாஞ் சமமாக விருத்தல் குற்றமென் றெண்ணி அதனைவிட்டு இழிந்து கீழே இருந்தனர். இதற்குட் பாண்டியன் எழுந்து, 'ஆசிரியரோடு ஒருங்கிருந்து அவர் கூறுந் திருக்குறளுரை கேட்டற்குரியார் யார்?’ என வினவலும், அங்கிருந்த புலவரெல்லாரும் ஒருப்பட்டு

66

ஒருமுகமாய் முன்னே இறையனாரகப் பொருட்கு

நக்கீரனாருரைத்தவுரையே

மெய்யுரையெனத் தேற்றிய உப்பூரிகுடிகிழார் மகனாவார் உருத்திரசன்மரே!” என உரத்துக் கூவினர். அதன்பின், பாண்டியன் உருத்திரசன்மரை ஆசிரியரோடு உடன் இரீஇயினான். ஆசிரியரும் அவ்வுருத்திரசன்மரை முற்படுத்து “அகரமுதல” என்னுந் திருக்குறடொடங்கி மெய்யுரை யுரைப்பாராயினார். ஆசிரிய ருரைக்குங்காற் சொற்றொறுங் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்திக் கையுடைத்து உருத்திரசன்மரெனும் அவ்வற்புதப்பிள்ளை உவகை துளும்பி யாரவாரித்தலிற் பாண்டியனை யுள்ளிட்ட புலவரெல்லாரும் இறும்பூது மிக்கு, 'இஃதொப்பதோர் நூலும் இவரை யொப்பாரோர் ஆசிரியருங் கண்டிலேம் கண்டிலேம்!” என்று மிகவியந்து களிப்பாற் றதும்பினார். இங்ஙனம் அத்தெய்வத் திருக்குறணூலுரை யுரைக்கப்பட்டு முடிந்த வளவிலே, அங்கிருந்த உக்கிரப்பெருவழுதி, கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார் முதலியோரெல்லாரும் ஆசிரியரையும் அவரருளிச்செய்த திருக்குறளையும் வியந்து பாராட்டி ஒவ்வோர் வெண்பாட்டு உரைத்திட்டார். இஞ்ஞான்று திருவள்ளுவமாலையெனப் பெயரிய தொகுதியிற் பாட்டுக்கள் சொற்ற புலவரெல்லாரும் ஆசிரியரோடு ஒருங்கிருந்து கேட்டாரல்லர். அதன்கட் காணப்படுவார் பலர் அத்திருக்குறண்மாட்சி நன்கு புலப்படுதல் வேண்டி அங்ஙனஞ் செய்யுட்செய்த பிற்றை ஞான்றை நல்லிசைப் புலவரென்றே துணிக. மதுரைக் கூலவாணிகன் சாத்தனாருஞ், செங்குட்டுவன்மேல் ஐந்தாம் பத்துப் பாடிய பரணரும் நீண்ட ஆயுள் பெற்று நெடுநாளுயிர்த்திருந்தார் என்று தோன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/242&oldid=1579867" இலிருந்து மீள்விக்கப்பட்டது