உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் 10

தலால், அவர் செங்குட்டுவன் காலம் வரையில் இருந்தது பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லையென்க. பரணரும், சாத்தனாரும் ஆசிரியர் திருக்குறள் இருந்துகேட்ட ஞான்று இருபத்துநான்கு அல்லது இருபத்தாறு ஆண்டு நிரம்பி ளம்பருவத்தினரா யிருந்தனரென்று கோடல் வழுவாமா றில்லை என்பது கடைப்பிடிக்க.

காட்டுவாம்.

ர்

அரசு

இன்னும் ஒருண்மை சாத்தனார் மணிமேகலைக் காப்பியம் இயற்றியபோது மதுரையிற் கடை ச்சங்கஞ் சிதர்ந்து போயிற்று என்பதற்கு, அவராவது அவரோடு உடனிருந்து சிலப்பதிகாரஞ் செய்த இளங்கோவடிக ளாவது அதனைப்பற்றி ஏதும் மொழிந்திட ாமையே உறு சான்றாம். உக்கிரப் பெருவழுதிக்குப்பின்னே தொடங்கிய ஆரியப்படை தந்த பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தெல்லாம் செந்தமிழ்வளஞ் சுருங்கலாயிற் றென்ப தற்கு, அவன் எல்லாருங் கல்விபயிறல் வேண்டுமென்று வற்புறுத் துரைத்த “உற்றுழியுதவியும்” என்னும் பாட்டே சான்றாதல் காண்க.தமிழ்க்கல்வி சுருங்காது மிக விரியுமாயின் அப்போதவன் இவ்வாறு வற்புரை கூறல் வேண்டுவதின்றாம். இங்ஙனஞ் சுருங்குகின்ற நாளிலே தமிழை மறித்தும் வளம்படுத்துதற்குக் கருதியிருந்த இவ்வரசன், அந்தோ! கோவலனை அறியாமையாற் ன காலை செய்வித்துப் பின் கண்ணகி தெருட்டத் தன் பிழையை நினைந்து உயிர் துறந்தான்; இவன் சடுதியில் இறந்தமையாற் பாண்டிநாட்டிற் பெருங்குழப்பம் நேர்ந்தது; கண்ணகியின் வெஞ் சினத்தாலும் ஊர் தீக்கொளுவப் பட்டுப் பொலிவிழந்தது; பன்னீர்யாண்டு எங்கும் பஞ்சம் உண்டாயிற்று; சாத்தனாரும் மதுரை நீங்கிச் சேரன் செங்குட்டுவன்பாற் போய் இருந் தனர். சாத்தனார் மணிமேகலையில்,

1866, ‘பன்னீரியாண்டு, பாண்டிநன்னாடு

மன்னுயிர்மடிய மழைவளமிழந்தது”

என்று தாமே நேரிற்கண்டு கூறாமாற்றாற் கண்டு கொள்க. சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தினையும், அரங்கேற்றுதற்குக் கடைச்சங்க மொழிந்தமையால் இளங்கோ வடிகள் கேட்பவே அதனை யுரைத்துச் சேரனவையில் அரங்கேற்றினார். இஃது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/243&oldid=1579868" இலிருந்து மீள்விக்கப்பட்டது