உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

219

66

"இளங்கோ வேந்த னருளிக்கேட்ப வளங்கெழுகூல வாணிகன் சாத்தன்

மாவண்டமிழ்த்திற மணிமேகலைத்துற

வாறைம்பாட்டினு ளறியவைத்தனனென!”

என்னும் மணிமேகலைப் பதிகத்தானுணர்க. அல்லதூஉம், ஆரியப்படைதந்த பாண்டியன் காலத்துச் சங்கம் ஒடுங்கி விட்டமையான் அன்றே, அவன் புலவர் யாரானும் பாடப் படவில்லை யென்க. இங்ஙனங் கடைச் சங்கம் ஒடுங்கிய பின்றைத் தமிழ்ப்புலவரை யோம்பித் தமிழ்வளம்படுத்துதல் சேரமன்னர் பாலதாயிற்று. இதனைப் பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு முதலிய நூல்களே கரிபோக்குமென்க. இங்ஙனஞ் சங்கமொடுங்கியவாறு என்னையெனச் சூழப்புகுந்த பின்னையார் ஒருசாரார் திருவள்ளுவராற் சங்க மழிந்ததெனத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அவர் கூறுவனவெல்லாம் உண்மைச்சரிதவியல் அறியமாட்டாதார் கூறும் வழுவுரைகளாய் முடியுமாதலின், அவையீண்டு ஆராயற்பாலனவல்லவென வொழிக.

இனி, இங்ஙனம் ஆராய்ந்துணர்த்திய சரிதவழியே புகுந்து நோக்கும் வழி ஆசிரியர் பிறந்தவாண்டு ஒருவாறு உறுதிப்படுத்தப்படும். கி-முன் 20-ஆம் வருடத்திலே ஆசிரியர் திருக்குறள் அரங்கேற்றிய பின்னரும் பத்துவருடம் இருந்தா ரெனக் கொண்டு, பண்டைக்காலத்து மக்களெல்லாம் நெடுநாளுயிர்த்திருப்பதோர் முறைபற்றி ஆசிரியரும் எண்பத்தைந்து வருடம் இருந்தாரெனக் கொள்வோமாயின், இவர் கி-முன் 95-ஆம் ஆண்டிலே பிறந்தாரென்று நிலை பெறுத்தப்படும். இவ்வாறு நிறுவுதல் சரிதமரபுக்கு இசைந்த வழக்கேயாமென்க. ஆசிரியர் மருந்து என்னும் அதிகாரத்தில் விளக்கிய நன்முறைகளை உற்று நோக்குங்கால், இவர் உடல் ஓம்புஞ் சுகாதார நன்முறை நன்கறிந்திருந்தா ரென்பது தேறப்படும். ஆகவே, ஆசிரியர் எண்பத்தைந்தியாண்டு உயிர்த்திருந்தாரென்றல் உலகவியற்கையோடு மாறுபடுதல் ஒரு சிறிதுமில்லையென்பது கடைப்பிடிக்க.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/244&oldid=1579869" இலிருந்து மீள்விக்கப்பட்டது