உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

7. ஆசிரியர் மதம்

இனி, ஆசிரியர் திருவள்ளுவனார் மேற்கொண்டொழுகிய மதம் இதுவென்று பகுத்தறியாமையால், அவரைப் பல்வகைச் சமயத்தாரும், தத்தமக் குரியராகக் கொண்டு எழுதி ஒருவரோ L ாருவர் மிக முரணுகின்றாராகலின், இவரது மதம் இதுதானென ஈண்டு நிறுவுதல் இன்றியமையாது வேண்டற் பாலதாம்.

L

இனி, இஞ்ஞான்று, இவ்விந்திய தேசத்தின் கண் நடை பறும் மதங்கடம்முள் ஒன்றனை ஆசிரியர் மேற்கொண் டொழுகினாரென்றல் சிறிதும் ஏலாது. இற்றைக்கு இரண் டாயிர வருடங்கள்முன் நடைபெற்ற மதவியல்பும் இஞ் ஞான்று நடைபெறும் மதவியல்புந் தம்முட் பெரிதும் பேதமுடையனவாய்க் கிடக்கின்றன. உலகவியற்கைப் பொருள்களெல்லாங் காலங்கடோறும் வேறுபட்டுவரும் இயல்பினவாம். ஆகவே, இஞ்ஞான்றை மதங்களுள் ஒன்றன் பால் வைத்து ஆசிரியர் மதம் இதுவெனத் துணிதல் இழுக்கா மென்க. மற்று ஆசிரியர் தழீஇ ஒழுகிய திதுவென்றாராய்ந்து உரைநாட்டுதலே பொருத்த முடைத்தாமாகலின் ஆசிரியர் காலத்து நடைபெற்ற மதங்களிவை யென்பது ஈண்டு விளக்குவாம்.

ஆசிரியர் காலத்திற்குச் சிறிது பின்னே இயற்றப்பட்ட தாயினும், ஆசிரியர் காலத்தும் அவர்க்கு முன்னும் நடை பெற்ற நிகழ்ச்சிகளையே எடுத்துக் கூறுதலால் மணிமேகலை என்னுங் காப்பியமே ஈண்டு ஆசிரியர் மதம் இதுவென நிச்சயித் தற்குப் பெரிதும் பயன்படுவதாம். அக்காப்பியத்திற் சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதையில் அக்காலத்துள்ளா ராற்றழுவப்பட்ட மதங்களும், அவர் தம்மால் ஆராய்ந்தறியப் பட்ட தத்துவ சாத்திரங்களும் இனிது காட்டப்பட்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/246&oldid=1579871" இலிருந்து மீள்விக்கப்பட்டது