உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

அஞ்ஞான்று நடைபெற்ற மதங்கள் பெற்ற மதங்கள் உலோகாயதம்", பூத வாதம்2, பௌத்தம்3, நையாயிகம், வைசேடிகம்5, சைனரில் ஆசீவக மதம், சைனரில் நிகண்ட வாதமதம்', மீமாஞ்சகம், ஆ வேதமதம், பிரமமதம்", வைணவ மதம்", சாங்கியம்2, சைவ சமயம்3 முதலியனவாம்.

இனி, இவை தம்முள் உலோகாயதமென்பது மண், புனல், அனல், கால் எனப் பூதங்கள் நான்கே உள்ளனவென்றும், இவை தம்மை நேரே உணர்கின்ற பிரத்தியக்கமே பிரமாணமல்லது ஏனை அனுமானம் பிரமாணமாக மாட்டாதென்றும், ஆத்திப்பூவுங் கருப்பங்கட்டியும் வேறு சிலவும் சேர்த்தவழி மதுவின்கண் மயக்கத்தைத் தருங்களிப்புத் தோன்றினாற் போல, இந்நான்கு பூதங்களுங் கூடுங்கால் அக்கூட்டத்தில் ஓர் உணர்வு தோன்றும் என்றும், அப்பூதக் கூட்டம் பிரிந்து அழியுங்கால் ம் அவ்வுணர்வும் உடன் அழிவெய்துமென்றும், இவ்வுணர்வின் வேறாக உயிர் என்பதொரு பொருளில்லை யென்றும், இறந்த வுயிர் மீளப் பிறவாமையின் முற்பிறப்பும் பிற்பிறப்பு மில்லை யென்றும், இருவினையுஞ் சுவர்க்க நரகங்களும் தேவர் நரகரும் கடவுளும் எல்லாம் பொய்ப் பெருள்களா மென்றும் வற் புறுத்துக் கூறும்.

இனிப் பூவாதமென்பது இவ்வுலகாயதக் கொள்கையில் விடப்பட்ட ஆகாயம் ஒன்றனையுங் கூட்டிப் பூதங்கள் ஐந்தா மெனக் கொண்டு, ஏனை அதன் கொள்கைகள் முழுவதூஉம் ஒருப்பட்டுக் கூறுவதாம். ஆகவே, உலகாயதமும் பூதவாதமுந் தம்முட் பேதம் பெரிது மில்லாதனவாம் என்க.

66

இனி, ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் உலகாயதம் பூதவாத மென்னு மிவற்றைத் தழுவி ஒழுகினரா வென்று ஆராய்வாம். ஆசிரியர் மண், புனல், அனல், கால், விசும்பு என்னும் ஐம்பூதங்களும் பிறத்தற் கிடமாம் 'சுவையொளி யூறோசை நாற்ற மென்றைந்தின் வகை”யினைக் கூறுதலானும், “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்து மகத்தே நகும்" என்புழிப் பூதங்கள் ஐந்தேயாமெனக் கிளந்து கூறினாராகலானும், இவர் உலகாயதவாதி யல்லராதல் நன்கு துணியப்படும்.

இனி, ஆசிரியர் காணப்பட்ட வுலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுவான் வேண்டித் தொடங்கிய “அகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/247&oldid=1579872" இலிருந்து மீள்விக்கப்பட்டது