உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

6

223

முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு” என்னு முதற்செய்யுளிலேயே பூதவாதிக்கு உடம்பாடல்லாத அனுமானப் பிரமாணத்தைத் தழுவினார். மேலும் அவ்வாதி ஐம்பூதக் கலப்பான இவ்வுடம்பே உயிராகு மென்னுந் தேகான்ம வாதத்தை உடம்படாது, ஆசிரியர் உயிர் உடலின் வேறென்பது பொள்ளெனப் புலப்படுமாறு “கள்வார்க்குத் தள்ளும் உயிர் நிலை” என வைத்து உயிர் நிற்றற்கு உடம்பு ஓர் இடமா மெனவும், “உயிருடம்பின் நீக்கியார்” எனவும். “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே, உடம்போடுயிரிடை நட்பு” எனவும், “ஊனைக் குறித்த வுயிரெல்லாம்” எனவும், "உடம்போடு உயிரிடை யென்ன மற்றன்ன, மடந்தைணெயா டெம்மிடை நட்பு” எனவும் தங்கருத்து நன்கு விளக்கிக் கூறுதலானும், அவர் இறந்தவுயிர் மீளப்பிறவா தெனக் கூறுதலைத் தழுவாது, “அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது, பொன்றுங்காற் பொன்றாத் துணை” என்பதனால், இவ்வுடம்பு ஈண்டு ஒழியினும் அறப்பயன் அவ்வுடம்பின் நின்ற உயிர்க்கு மறு பிறவியிற் றுணையாம் எனவும், “வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன், வாழ்நாள் வழியடைக் குங்கல்' என்பதனால் ஒருவன் றான் செய்த அறப்பயன் அவனுக்குப் பிறவிகள் வரவொட்டாது தடுக்கு மெனவும், “மகன் றந்தைக் காற்றுமுதவி யிவன் றந்தை. என்னோற்றான் கொல் லென்னுஞ் சொல்” என்பதனால் முற்பிறவி உண்டெனவும், "சிறுமையு ணீங்கிய வின்சொல் மறுமையு மிம்மையு மின்பந்தரும்” என்பதன்கண் இன்சொல் ஒருவற்கு மறுமையினும் இன்பம் பயக்கு மெனவும், “எனைப் பகையுற்றாரு முய்வர் வினைப்பகை, வீயாது பின்சென் றடும்” என்பதனால் பிறவிகள் பல உளவாம் எனவும், “தவமுந் தவமுடையார்க் காகுமவமதனை, அஃதிலார் மேற்கொள்வது என்பதில் இப்பிறப்பில் தவஞ் செய்வார்க்கு அதனைச் செய்தற் கேதுவாக முற்பிறவியிற் செய்த தவம் உண்டெனவும், “இம்மைப் பிறப்பிற் பிரியலமென்றேனாக், கண்ணிறை நீர் கொண்டனள் எனவும்; “எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்,பண்புடை மக்கட்பெறின்,” “எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண், விழுமந்துடைத்தவர் நட்பு”, “ஒருமை யுளாமைபோ லைந்தடக்க லாற்றின்,எழுமையு மேமாப் புடைத்து,” “ஒருமைக்கட்டான் கற்ற கல்வியொருவர்க், கெழுமையு மேமாப் புடைத்து,” “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டுஞ் செய்யா, திகழ்ந்தார்க் கெழுமையு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/248&oldid=1579873" இலிருந்து மீள்விக்கப்பட்டது