உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

❖ LDMMLDMELD-10 மறைமலையம்

மில்”, “ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு” என்றற் றொடக்கத்தனவற்றால் பிறப்புகள் ஏழாமெனவும், “அவாவென்ப தெல்லா வுயிர்க்கு. மெஞ்ஞான்றுந், தவாப் பிறப்பீனும் வித்து” என்பதன் கண் அவாவினால் உயிர்கட்குப் பிறவிகள் இடையறாது வருமெனவும் விளங்க விரித்துக் கூறுதலானும், உடம்பு வேறு உயிர்வேறு என்பதும், அவ்வுயிர்க்கு முற்பிறவியும் வேறு பல்பிறப்புக்களு முளவா மென்பதும், ஆசிரியர்க்குக் கருத்தாதல் தெற்றெனப் புலப்படும்.

இனி, இருவினையும் அவற்றிற்குக் காரணமாம் ஊழும் இலவென்னும் அப்பூதவாதி கூற்றை உடம்படாது, “இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன், பொருள் சேர்புகழ்புரிந்தார் மாட்டு” என்றும், “தம்பொருளென்பதம் மக்கள வர்பொருள், தந்தம் வினையான் வரும்” என்றும், “கேடும் பெருக்கமுமில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கணி” என்றும், ஆகூழாற்றோன்று மடி” என்றும், “ஊ என்றும், “ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று சூழினுந் தான்முந்துறும்” என்றும் வற்புறுத்துக் கூறுமாற்றால், ஆசிரியர்க்கு இருவினையும் அவற்றின்

66

காரணமாம் ஊழும் உண்டெனல் துணிபாயிற்று.

6

99

இனித் துறக்கநிரயங்கள் பொய்யாமெனும் அப் பூதவாதி போலாது. ஆசிரியர் துறக்கத்தைச் செல்வமென வைத்துச் “சிறப்பீனுஞ் செல்வமுமீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு” எனவும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும் எனவும், “அடக்கமமரருள் உய்க்கு மடங்காமை, யாரிரு ளுய்த்து விடும்” என்பதனால் துறக்கத்திற் செல்லுதற்கும் நிரயத்தில் விழுதற்கும் அடங்குதல் அடங்காமை யிரண்டுங் காரணமாமெனவும், அழுக்காறென வொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்” என்பதில் அழுக்காறென்பது இம்மையிலும் திருவை இழப்பித்து மறுமையில் நிரயத்திற் போக்குமெனவும், ‘புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே. யொப்புரவினல்ல பிற என்பதனால் ஒப்புரவினுஞ் சிறந்த ஒழுக்கத்தைத் துறக்கத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதலரிதா மெனவும், “நல்லா றெனினுங் கொளறீது மேலுலக, மில்லெனினு மீதலே நன்று” என்பதில் ஈகையினால் துறக்கம் வராதாயினும் அதுவே செயற்

66

பிற'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/249&oldid=1579874" இலிருந்து மீள்விக்கப்பட்டது