உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

225

பாற்றெனவும், “அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த இன்னா வுலகம் புகல்” என்பதில் அருளுடையார் இன்னாமை பயப்பதான இருள் நிறைந்த நிரயத்துட்புகா ரெனவும், உண்ணாமையுள்ள துயிர்நிலை

66

யூனுண்ண,

அண்ணாத்தல் செய்யா தளறு” என்பதனால் ஊனுண்டவர் நிரயத்துளழுந்திப் பின் அதனின்றும் மீளாரெனவும், “ஒருமைச் சயலாற்றும் பேதை எழுமையுந், தான்புக் கழுந்து மளறு என்பதன்கண் மடவோனாயினான் தான் எழுபிறப்புஞ்சென்று நிரயத்தில் அழுந்துதற்கு ஏதுவான பாவகருமங்களைத் தன் ஒரு பிறப்பினுள்ளேயே ஈட்டிக் கொள்வானெனவும், “வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்களாழு மளறு’ என்பதனால் வரைவின் மகளிர் மென்றோள் முயக்கம் கீழ்மக்கள் சென்றுபடும் நிரயமாமெனவும், பலவிடத்து வற்புறுத்துக் கூறுதலால் துறக்க நிரயங்கள் உண்மை அவர்க்குத் தேற்றப் பொருளாதல் இனிது பெறப்படுகின்றது.

66

னித் துறக்கவுலகத்தில் உறையுந் தேவரையும் நிரயத்துள் உலாவும் நரகரையும் பூதவாதி உளரெனக் கொள்ளாது மறுப்பாராக. ஆசிரியர் திருவள்ளுவரோ, “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு", தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங், கைம்புலத் தாறோம்பறலை”, “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்”, “பெற்றார் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப், புத்தேளிர் வாழு முலகு”. “நிலவரை நீள் புகழாற்றிற் புலவரைப், போற்றாது புத்தெ ளுலகு”, “செவியுணவிற் கேள்வியுடையா ரவியுணவின், ஆன்றாரோ டொப்பர் நிலத்து”, “இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள், அமையார்தோளஞ்சு பவர்”, “தேவரனையர் கயவர வருந்தா மேவன செய்தொழுகலான்” என்றற்றொடக்கத்துச் செய்யுட்களில் முறையே இங்கு வானம் நீர்பெய்யாது வறக்கு மாயின் தேவர்க்கும் விழாவும் பூசனையும் நடவா எனவும், தென்திசையில் வாழும் பிதிரராகிய தேவரையும் தெய்வத்தையும் வரும் விருந்தினரையும் உறவினரையும் தன்னையும் ஓம்புதல் இல்லறத்தார்க்குக் கடமை யாமெனவும், இல்லற நெறி வழாது வாழ்க்கை செலுத்து வோன் மறுமையிற்றேவர் குழாத்திடையே வைக்கப்படுவா னெனவும், மகளிர் தங்கணவர் சொல்வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/250&oldid=1579875" இலிருந்து மீள்விக்கப்பட்டது