உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் - 10

நடப்பாராயின் தேவர் உறையுந் துறக்கநாடு புகுவரெனவும், இந்நிலவுலகத்திற் பொன்றாது நிற்பதான புகழை ஒருவன் ஈட்டுவானாயின் அவனையே துறக்கநாடு போற்றுமல்லாது தன்கண் உள்ள தேவரையும் அதுபேணாதெனவும், பிறர் பொருளைக் கவர்வார்க்குத் தம்முடம்புந் தவறியொழியும் அது செய்யார்க்குத் தேவருலகுந் தவறாது கிடைக்கும் எனவும் நுண்பொருள் கேட்டலாகிய செவியுணாவினைப் பெறுகின்றவர் அவியுணாவினைப் பெறுந் தேவரோடொப்பரெனவும், தன் மனையாள் போகத்தையே விழைந்து அவட்கு அஞ்சிநடப்போர் தேவரைப்போற் செல்வமுடையராயினும் பெருமை எய்தார் எனவும், கீழ்மக்கள் தாம் வேண்டியவாறெல்லாம் ஒழுகுதலின் அவர் தேவரை ஒப்பர் எனவுந்தாந் தேவருண்டென்பதனைத் துணிபு தோன்றக் கூறியருளினார். இன்னும் 'அருஞ்செவ்வி யின்னாமுகத்தன் பெருஞ் செல்வம், பேஎய்க் கண்டன்ன துடைத்து” என்பதனால், தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலந்தரானாய்க் கண்டவர்க்குச் சுளித்த முகத்தோனாய் உள்ள அரசற்குரிய பெருஞ்செல்வம் பேயாற் காவல் செய்யப்பட்ட பொருட்புதையல் போலுமெனவும், “உலகத்தா ருண்டென்பதில் லென்பான், வையத்தலகையா வைக்கப்படும்” என்பதனால் அறிவுடையார் பலருடையார் பலரும் உண்டென்பதொன்றை இல்லையென்றுரைக்கும் புல்லறிவாளன் ஈண்டு ஓர் பேய் என்று வைக்கப் படுவானெனவும், அணங்கு கொலாய்மயில் கொல்லோ கனங்குழை, மாதர்கொன் மாலுமென் னெஞ்சு” என்பதனால் என்னாற் காணப்பட்ட இப்பெண் வருத்து கின்ற சூரரமகளோ சிறந்தமயிலோ மாதரார் தாமோ இன்னளென அறியமாட்டாமல் என்னெஞ்சம் மயங்குகின்ற தனவும் பேய் மோகினி முதலிய நரகருண்மையினை ஆசிரியர் தெருட்டினாராகலின் இவர் பூதவாதிக்கு முற்றும் மாறாவரென்பது துணிபொருளாம்.

66

இனிக் கடவு ளென ஒரு பொருளில்லையென்று நிறுவுறுதலே பூதவாதியின் முடிந்த கொள்கையாம். மற்று நம் ஆசிரியரோ தம்மருமைத் திருக்குறளின் முதலிலே கடவுள் வாழ்த்து என ஓரதிகாரம் வகுத்துக் கொண்டு அம்முழுமுதற் பொருளை ‘ஆதிபகவன்’, ‘வாலறிவன்”, ‘மலர்மிசை யேகினான்', வேண்டுதல் வேண்டாமையிலான்', இறைவன்' 'பொறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/251&oldid=1579876" இலிருந்து மீள்விக்கப்பட்டது