உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

241

போலும்! நோய்க்கு மருந்தாவதும் திருக்குறளே என்பதும் இதனாற் பெறப்படும்.

அருமருந்தாயமையும் இந்நூலை யருளிய ஆசிரியர் தம் இல்லற வாழ்க்கையைக் குறித்து, “அடிசிற் கினியாளே அன்புடையாளே" என்ற தொடக்கத்துச் செய்யுளிற் குறிக்கப் பட்டதொன்றைத் தவிர்ந்த பிற அகச்சான்று ஒன்றும் கிடைக்க வில்லை “அடிசிற் கினியாளே” என்று ஆசிரியர் முதற்கண் அட்டிற்றிறத்தை வியந்து விளித்தமை ஏனொவெனின், அத்திறத் தினாலேயே பெண்பாலார் தம் அன்புடைமை வெளிப்படுமாதலி னென்க. அன்போ, குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும்போல ஒருவர் தந்து காட்ட இயலாத தொன்று. அற்றாக, நாண்மிகுந்த மனைவியர் தம் கணவர்பால் அன்பு செலுத்தி ஈடுபட்டிருப்பதை அன்னார் விரும்பியாங்கு உணவு திருத்திச் சமைத்துப் படைத்தலி னாலேயே வெளிக் காட்டுவார். இதை யுணர்த்தவே, “அடிசிற் கினியாளே” என்று வியந்த ஆசிரியர் “அன்புடையாளே" என்று அடுத்து அரற்றி உண்மை தெரித்தனர். கணவன் மனைவி வாழும் முறை மிகவுஞ் சிறந்த தாக இருக்க வேண்டுமாயின், மனைவி,

66

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை'

(குறள் 51) என்பதற்கிலக்கா யிருத்தல் வேண்டும் என்று ஆசிரியர் நன்கு எடுத்து விளக்கி யுள்ளார். அக்கூற்று அவர் தம் வாழ்க்கையிற் றாம் அறிந்துணர்ந்ததே என்பதை நோக்கின், வியக்காமலிருத்தலு மொல்லுமோ? மனைவியார் இறந்ததன் பின் எத்துணைக்காலம்

சிரியர் வாழ்ந்திருந்தார் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் ஆசிரியர் எண்பது ஆண்டுகட்குக் குறையாமல் நூறு ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்திருக்கக் கூடும் என்பதே என் கொள்கை. இக் கொள்கை தானும் ஆசிரியரே எழுதியுள்ள "மருந்து" என்னும் அதிகாரத்திற் கண்ட உண்மைகளைக் கொண்டு ஆராய்ந்து துணியப் பட்டதாகும்.

66

“அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து”

(குறள் 944)

என்று ஆணையிட்டார் ஆசிரியர். தேரையரும் ஞாலமே வந்திட்டாலும் “பசித்தொழிய உண்ணோம்” என்றார். இதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/266&oldid=1579891" இலிருந்து மீள்விக்கப்பட்டது