உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

L

மறைமலையம் - 10

6

பசியாமலுண்டால் நோய் அணுகும் என்பதும், நோயணுகுங்கால் உண்ணாது பட்டினி கிடந்தால் நோய் விலகும் என்பதும் போதருவனவாம். டாக்டர் டியூபி என்ற மேனாட்டு மருத்துவர், இன்றும் இவ் வுண்மையைப் பின்பற்றி நோயாளிக்கு வேறு மருந்தொன்றும் கொடாமல், மலக்குடலைக் கழுவச் செய்தபின் 10 நாட்களென்றும் ஒரு திங்களென்றும் இரண்டு திங்களென்றும் பட்டினி கிடக்கச் செய்து நோய் தீர்த்து வருகிறாரென்று கேட்டிருக்கலாம். இது கொண்டு வெறும் பட்டினி கிடந்து மருந்தொன்றும் எடாமலிருப்பதால் நோய் தானே தீர்ந்து விடுமென்று கருதிவிடக் கூடாது; குறிப்பிட்ட சில செயன் முறைகளையும் உடன் கையாள வேண்டும். பெற்றோரின் ஒழுக்கக் கேட்டாற் பல நோய்களுக்கு ஆளாகப் பிறந்த ஒரு சிறுவர் அளவற்ற மருந்துண்டும் நோய் தீராராய், இறுதியில் 35 நாள் பட்டினி கிடந்து முழுநலம் எய்தியதாகக் குறிக்கப்பட்டுள்ளது; பண்டைக்காலத்து நம் நாட்டு முனிவர்கள் பட்டினியால் நோய் நீக்கும் முறையைக் கையாண்டதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. முறையாகப் பட்டினி கிடப்பதால் உடல் சுடர்விரி பசும் பொன்னென இலகும் என்பதும் பண்டைக் கோட்பாடு. ஆங்கிலத்தில் பட்டினியின் உண்மைப் பொருள்" (The Philosophy of Fasting) என்றே ஒருநூல் எழுதப்பட்டுள்ளது. இஃதிவ்வாறாக, இற்றைநாளில் தமிழ் நாட்டு மருத்துவர்கள் தங்கள் மருந்து பிடிப்பதற் கெனச் சாராயத்தையும், எலும்புச் சாற்றையும், ஊன் சாற்றையும், முட்டையையும் உண்ண வைத்தல் எத்துணை இரங்கத் தக்கது!

66

“மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி னூறுபா டில்லை யுயிர்க்கு

(குறள் 945)

என்று வள்ளுவர் அறிவு தெருட்டியதை அவர்கள் ஓர்ந்திலர்கள் போலும்! அஃதொன்றுமே யன்றி அவர்கள் கையாளும் முறையால் மறைமுகமாகப் புலா லுண்ணல், கொலை என்ற குற்றங்களுக்கும் ஆளாகின்றனர் என்பதையும் அவர்கள் உணர்வார்களாக.

இனி, குறித்த முறைப்படி வாழ்ந்து வந்தால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்திருத்தல் கூடும் என்பது இற்றை நாளிலும் காணக்கிடப்பதோர் உண்மையாகும். மேனாட்டார்களிற் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/267&oldid=1579892" இலிருந்து மீள்விக்கப்பட்டது